சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, துப்புக் கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடி சாட்சி நாங்க சொல்லி இருக்கோம். பொல்லாத ஆட்சிக்கு பொல்லாசியே சாட்சி என்று சொல்லி இருக்கின்றோம். ஆட்சியை பொறுத்த அளவில் தவறு நடக்கின்ற பட்சத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்தான் குற்றம் சாட்ட வேண்டும். தவறு நடப்பதற்கு முன்பு வருமுன் காப்போம் என்பது போல் தவறு நடக்காமல் நடவடிக்கை எடுப்பது ஒரு புறம். தவறு நடந்துவிட்ட பிறகு அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது இன்னொரு புறம்.

இன்னார் இனியவர் என்று எங்கள் முதலமைச்சருக்கு பாகுபாடு இல்லை. தவறு யார் இழைத்திருந்தாலும் சொந்த கட்சிக்காரர் இழைத்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் முதல்வருடைய நோக்கம் மற்றும் நிலைபாடு. அந்த வகையில் மாநகராட்சியில் கூட இரண்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளோடு சண்டையிடுவதை அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றவுடன், பதவியிலிருந்தே நீக்கிய ஆட்சி தமிழக முதல்வருடைய ஆட்சி, நீதியின் ஆட்சி, சட்டத்தின் ஆட்சி.

கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி, அதற்கு சாத்தான் குள சம்பவமே சாட்சி. சரி இப்ப நீங்க எங்க இருக்கிறீர்கள். சாலையில் தான் இருக்கிறீங்க. அவங்க பாண்டிச்சேரியில் ஆளுநராக இருந்து வந்தாங்க இல்லையா, அங்க தள்ளாடிக்கிட்டே இருந்தவங்கள பார்த்துட்டு வந்ததால், இங்கும் எதைப் பார்த்தாலும் அவங்களுக்கு தள்ளாட்டமா தெரியுது.

இதையும் படிங்க: போர் கொடுமை...மரணத்தின் விளிம்பில் 14 ஆயிரம் குழந்தைகள்... ஐ.நா எச்சரிக்கை!
அன்பு சகோதரிக்கு “மீடியா மேனியா” ஏதாவது இப்படி பேசி கொண்டுதான் இருப்பார். நீங்கள் நின்று கொண்டிருக்க சாலை எப்படி தரமாக இருக்கிறது என்று நீங்கள் அவரிடம் அடுத்த முறை கேள்வி கேட்கும்போது சொல்லுங்கள் என்றார்.
இதையும் படிங்க: விஷவாயு தாக்கி இறந்தவர்களுக்கு ரூ.30 லட்சம் நிவாரணம்..! முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!