கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்து துறைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருவாய் துறை, கல்வித் துறையுடன் இணைந்து மாணவர்களுக்கு டேட்டா எனப்படும் முகவரி, ரத்த வகை, ஆதார் எண் கல்வித் தகுதி போன்றவை வழங்கலாமா என பரிசீலித்து கொண்டிருக்கின்றோம். அதில் குறிப்பாக வருவாய் துறையின் மூலம் 10 ,12 படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் ஜாதி சான்றிதழ் பெற்று வழங்கப்படுவது ஐந்தாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் சென்று தான் சான்றிதழை பெற முடியும். தற்பொழுது பள்ளிகளிலேயே சான்றிதழ்களை வழங்கும் பணியை வருவாய்த்துறை செய்து வருகிறது.
பள்ளி கல்விதுறை வருவாய்த்துறை இணைந்து டேட்டா எனப்படும் முகவரி கல்வி தகுதி, சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை பார்கோடு மூலமாக வழங்கலாமா என்பதை பரிசீலித்து வருகிறோம். இரண்டு துறையும் இணைந்து பேசியதற்கு பிறகு மேற்கொள்ள இருக்கிறோம். சாதிச்சான்றை பொருத்தவரை கல்வி கூடத்தில் ஆசிரியர் கேட்கின்ற 10, 12 வகுப்புகளில் துறையின் சார்பில் தொடர்ந்து வழங்கப்படும்.
அதே நேரத்தில் வழங்கப்படும் டேட்டா சாதி அடிப்படையில் இருக்காது. பள்ளியில் சாதி இடம்பெறக்கூடாது என்பது தான் அரசின் நோக்கம். சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கும் இயக்கம் தவெக. இந்த இயக்கத்தை பொறுத்தவரை மாணவர் நலன் கருதி அவர்களுடைய வாழ்க்கையில் உடனுக்குடன் தகவல்களை அவசர காலங்களில் பயன்படுத்திக் கொள்ள அவருடைய முகவரி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள ஏதுவாக அமையும். இதை மட்டும் தான் செய்யப் போகிறோம் சாதி சான்றிதழை இணைப்பதாக வரும் தகவல் தவறானது. எப்போதும் இணைக்க மாட்டோம். மாணவர்கள் எல்லோரும் ஒன்று தான் எல்லா மதமும் ஒன்று டேட்டா மட்டும் அதில் இருக்கும். ரத்த வகை கல்வி தகுதி இருக்கும் நேற்று முன்தினம் பேசியது இல்லை அதை மீண்டும் பேச வேண்டாம் மாணவர்களின் உள்ளத்தில் பீலிங்ஸ் இருக்கும். டேட்டா வுடன், சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்றுதான் சொன்னேன்..
இதையும் படிங்க: அது தேவையே இல்ல! கொளுத்திப்போட்ட செங்கோட்டையன்! கொந்தளித்த அன்பில் மகேஷ்!!
டெல்லி பிரதிநிதிகள் நியமிப்பது அரசின் கொள்கை முடிவு. அதில் இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதில் தவறு ஏதும் இல்லை நூற்றுக்கு நூறு சதவீதம் முதல்வரால் நியமிக்கப்பட்ட அனைவரும் தமிழ்நாட்டிற்கு குரல் கொடுப்பார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு கொண்டுவர திட்டங்களாக இருந்தாலும் நதிநீர் பிரச்சனைகளாக இருந்தாலும் முழுமையாக அதற்கு வாதிடுவதற்கும் குரல் கொடுப்பதற்கும் நியமிக்கப்பட்ட அனைவரும் தயாராக இருப்பார்கள்.
தவெகவில் விஜயபாஸ்கர் இணைவது குறித்து ஆலோசனை சென்று கொண்டிருக்கிறது. இணைவது எப்போது என விஜயபாஸ்கர் தான் யோசித்துச் சொல்ல வேண்டும். அவர் கையில் தான் இருக்கிறது அவர் இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார்.
மாநிலத்திற்கு தகுந்தாற் போல் பேரிடர் நிதி ஒதுக்கப்படுகிறது ஆந்திராவில் அதிகமாக புயல் பாதிப்பு இருக்கும் அது போன்ற மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் மற்ற மாநிலங்களுக்கு குறைவாக ஒதுக்கப்படும் இந்த நிதி கூடுதலாக தேவைப்படும் வெள்ளச் சேதம் வரும் போது கூடுதலாக நிதி பெறுவதற்கு அந்த நேரத்தில் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம் அவர் மத்திய அரசை அனுகி நிதியை பெற்று தருவார்..
இடைத்தேர்தலில் பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட்டு வழங்கப்படுமா என்பதை கட்சி தலைமை முடிவு செய்ய அவர்களுக்கே வழங்குவார்களா என்பதை இப்போது முடிவு செய்ய முடியாது
இதையும் படிங்க: சாதிவெறி கூட்டத்திற்கு தீனி போடாதீங்க... எதிர்பாராத இடத்தில் இருந்து செங்கோட்டையனுக்கு வந்த வார்னிங்...!