புதிய பேருந்து நிலையம் குறித்து அதிமுக சார்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பேட்டியளித்தார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று நேரடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் - கடந்த நான்கு ஆண்டுகளில் கரூர் மற்றும் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி உள்ளார் என தெரிவித்தார்.
புதிய பேருந்து நிலையம் காலை மாலை போக்குவரத்து நெரிசல் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவலுக்கு பதில் கூற முடியாது. புதிய பேருந்து நிலையம் பெருமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பொதுமக்களே தெரிவித்து வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திராவிடத்தின் மாசற்ற வாரிசு அதிமுக தான்... எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்
அதேபோல் கரூர் மாவட்டத்திற்கு தேவையான மேம்பாலப் பணிகள் குறித்து விரைவில் அதற்கான தொகை ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகள் மாநகராட்சி துணி மேயர் மற்றும் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதிமுகவினர் விமர்சிப்பது என்ன?
கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்கள், அதனால் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை குறைக்கும் வகையில் கரூரில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் கிராமம் கருப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 12.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 40 கோடி ரூபாய் செலவினத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் கட்டிமுடிக்கப்பட்டு சமயத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது.
பொதுமக்கள் வசதிக்காக பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மார்க்கத்திலிருந்து கரூர் வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடையவும், மதுரை, திண்டுக்கல், பழனி மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் சுக்காலியூர் ரவுண்டானாவிலிருந்து செல்லாண்டிபாளையம் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தால் எந்த பலனுமில்லை என அதிமுக தொடர்ந்து குற்றச்சாட்டி வரும் நிலையில், அதற்கு இன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடியின் instagram அரசியல்… திமுகவை விமர்சிச்சா பெரிய ஆளா? பந்தாடிய அமைச்சர் சிவசங்கர்…!