திருச்சுழியில் திமுக 4-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு பேசியதாவது: பாகிஸ்தான் பார்டரில் இந்தியாவின் மீது ஒரு தாக்குதல் நடத்தியவுடன் இந்திய இராணுவம் தலைநிமிர்ந்து பாகிஸ்தானுக்கு இந்திய விமானங்களை அனுப்பி எப்படி நமக்கு பதிலுக்கு பதில் திருப்பிக் கொடுக்கக் கூடிய பெருமையை இந்திய திருநாடு ராணுவ வலிமையை இன்று பெற்று இருக்கிறது. எல்லையில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அந்த விமானங்கள் தான் நாம் கொரோனா காலத்தில் பாதிப்படைந்த போது ஆக்சிஜன் கொண்டு வந்து காப்பாற்றியது என்றார்.

இன்று எத்தனையோ பேர் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் நான் கூட சட்டமன்றத்தில் கேட்டேன். மனக்கணக்கை தப்பாக போடுகிறீர்கள் உங்கள் கணக்கே டெல்லியில் யாரோ உட்கார்ந்து போடுகிறார்கள் என்று பேசினேன். நாங்கள் எந்த கணக்கும் போட வில்லை நாங்கள் தெளிவாக இருக்கிறோம் கொள்கையுடன் இருக்கிறோம் என்று என்னிடம் சொன்னார்கள். நான் சொன்னவுடன் பிஜேபி உறுப்பினர் சிரித்தார். அப்படி என்றால் அம்மையாருக்கும் உங்களுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று கூறினேன் அப்போதும் மறுத்தார்கள்.
ஆனால் சொல்லி இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை உடனடியாக பூனைக்குட்டி ப்ளேட்டை பிடித்து டெல்லி போய்விட்டார்கள் எதற்காக போனீர்கள் என்று கேட்டோம். நாங்கள் நாட்டு மக்களுடைய நலன்களை பாதுகாப்பதற்காக போனோம், நலத்திட்டங்கள் குறித்து பேசுவதற்காக போனோம் என்று பேசினார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள் என்ன சார் பேசினீங்க என்று. நாங்கள் அரசியல் தான் பேசினோம், கூட்டணி வைப்பது குறித்து தான் பேசினோம். இப்பதான் எடப்பாடி பழனிச்சாமி பேசினார் தமிழ்நாட்டின் நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்கள் பற்றி பேசினோம் என்று. அப்படியா சொன்னாரு இல்லையே நாங்கள் அரசியல் கூட்டணி குறித்து தானே பேசினோம் என்று சொன்னார்.

இதையும் படிங்க: "கரப்ஷன் இபிஎஸ்" நீங்க போய் வெர்ஷன் பத்தி பேசலாமா? பொளந்து கட்டிய ஆர்.எஸ். பாரதி..!
அதிமுகவும் பாஜகவும் கூட்டணி தான் வைக்க போறோம் அடுத்து எங்களுடைய தேசிய கூட்டணி ஆட்சி தான் வரப்போகிறது என்று பேசினார். இப்ப இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நீங்கள் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது காரணம் தமிழ்நாட்டு மக்கள் தெளிவான மக்கள் யார் என்று ஓர் திறமையுடன் போராடக்கூடிய ஒரு ஆட்சி இன்று இருக்கிறது. ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பிஜேபி ஆட்சி நம்மை புறக்கணித்து இருக்கிறது என்று சொன்னால் தமிழ்நாட்டின் உரிமைகளை மாநிலத்திற்கான அத்தனை உரிமைகளையும் போராடி பெறக்கூடிய ஒரு ஆட்சியாக இன்றைக்கு இருக்கிறது.
இந்தியாவிலேயே யாரும் தர முடியாத ஒரு தீர்ப்பை இன்றைக்கு சுப்ரீம் கோர்ட் அளவிற்கு நமது முதலமைச்சர் போயி வாங்கி தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் தான் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தரை நியமிக்க கூடிய அதிகாரத்தை பெறுவார். நம்முடைய ஜனாதிபதியாக இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றக்கூடிய மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்கின்ற அந்த வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை நாம் பெற்று வைக்கக்கூடிய காரணத்தால் தான் இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை மாநிலங்களும் இன்றைக்கு தமிழ்நாட்டை பின்பற்றி கொண்டிருக்கின்றனர்.
உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கைகொடுப்போம் நமது மாநில உரிமைகளை எந்த காலத்திலும் விட்டு தர மாட்டோம் என்றார்.
இதையும் படிங்க: 7 வயது சிறுவனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய நிதி அமைச்சர்... தங்கம் தென்னரசுக்கு குவியும் பாராட்டுகள்!