தமிழக அரசியலில் மக்களாட்சி விழுமியங்களை அடியோடு காலில் போட்டு மிதித்து, ஆளும்கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகப் பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும் திரைமறைவில் ரகசியக் கூட்டு வைக்க முயன்ற அசிங்கமான முடிவை நெஞ்சார எதிர்த்துத்தான், அதிமுகவில் நின்று வெற்றிபெற்ற மக்கள் தலைவி திருமதி மரகதம் குமரவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துச்சமென மதித்து ராஜினாமா செய்துவிட்டு மக்களின் நலனுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார் என்றும், நடப்பு இடைத்தேர்தலில் முதல் இடம் தவெகவிற்கு உறுதியாகிவிட்ட நிலையில் 2-வது இடத்தை யார் பிடிப்பது என்பதில்தான் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே அடிதடி போட்டி நடக்கிறது என்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் மதுராந்தகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்துப் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் ஆகியோர் இன்று தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின்போது பொதுமக்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்கள், தேர்தல் அறிக்கைத் துண்டுப் பிரசுரங்களையும், தவெகவின் வெற்றிச் சின்னமான 'விசில்' சின்ன மாதிரிகளையும் வாக்காளர்களுக்கு வழங்கி எழுச்சிமிகு ஆதரவு திரட்டினர். வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் விசில் அடித்தும் இரு அமைச்சர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாக்குச் சேகரிப்பின் போது பொதுமக்கள் மத்தியில் கர்ஜித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "எங்கள் கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான விஜய் அவர்களின் பெயரைக் கேட்டாலே இன்றைக்குக் கோபாலபுரமே நடுங்குகிறது; அண்ணா அறிவாலயமே கதிகலங்கிப் பயப்படுகிறது! எளிய மக்களுக்கான நல்லாட்சியைத் தவெக வழங்கி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், மக்கள் மன்றத்தில் எங்களை எதிர்கொள்ளத் துணிவின்றி அவதூறுகளை அள்ளி வீசுகின்றன. பெட்டி பெட்டியாக லஞ்சப் பணத்தை வாங்கிக் குவித்துத் தங்களை விற்றுக் கொண்ட திமுகவிற்கும், மக்களால் புறக்கணிக்கப்பட்டுத் தனது எதிர்க்கட்சி அந்தஸ்தையே முற்றிலுமாக இழந்துவிட்ட அதிமுகவிற்கும் இந்தத் தேர்தலில் டெபாசிட் கூடக் கிடைக்காது. அவர்கள் இருவருக்கும் இடையே நடப்பது யார் 2-வது இடம் பிடிப்பது என்பதற்கான போட்டியே தவிர, தவெகவின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்று சாடினார்.
இதையும் படிங்க: நல்ல வேளை தப்பிச்சிட்டேன்!! கொளத்தூர் மக்களே.. கோடான கோடி நன்றி!! கும்பிடு போட்ட மு.க ஸ்டாலின்!!
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை உணர்ந்து, தங்களுக்கு வாக்களித்த மக்களுக்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்ற ஒரே தன்மான உணர்வோடு பதவியைத் துறந்து தவெகவில் தஞ்சம் புகுந்துள்ளார் நமது வேட்பாளர் மரகதம் குமரவேல். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, மதுராந்தகம் தொகுதியை ஒரு முன்மாதிரித் தொகுதியாக மாற்றத் துடிக்கும் ஆளும்கட்சியின் வேட்பாளரான மரகதம் குமரவேலுக்கு வாக்காளர்கள் அனைவரும் தங்களது பொன்னான வாக்குகளை 'விசில்' சின்னத்தில் பதிவு செய்து, சரித்திரப் பிரசித்தி பெற்ற மாபெரும் வெற்றியை ஈட்டித் தர வேண்டும்" என்று ஆணித்தரமாகக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!