அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது தொடர்பான முடிவெடுக்க 13 பெண் உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.- அரசு தரப்பில் தகவல். வழக்கை 2027 ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும், அன்றைய தினம் குழு, தனது அறிக்கையைத் தாக்கல் செய்யவும் மதுரை கிளை உத்தரவு
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா, மதுரை அமர்வில், "தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனம் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவிலான குழுவை அமைக்கவும், பெண்கள் நலனை கருத்தில் கொண்டு முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த கொள்கையை அரசு உருவாக்கவும் உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: சாலையில் துண்டு துண்டாய் கிடந்த உடல்கள்... இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோரம்.. சிறுவன் உள்பட 3 பேர் பலி...!
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அரசுத்தரப்பில், "பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது தொடர்பான முடிவெடுக்க 13 பெண் உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய 3 மாத அவகாசம் தேவை" என தெரிவிக்கப்பட்டது.
இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "மிகவும் முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயத்தை இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த மனுதாரருக்கும், பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டு வழக்கை 2027 ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும், அன்றைய தினம் அமைக்கப்பட்ட குழு அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது! உச்ச நீதிமன்றம் பகீர் கருத்து!