சென்னை கொளத்தூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். நிதி ஆயோக் கூட்டத்திற்கு டெல்லிக்கு சென்ற பயணம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தான் வெள்ளை கொடியையும் எடுத்துச் செல்லவில்லை, காவி கொடியையும் எடுத்துச் செல்லவில்லை., வீம்புக்கென்றே எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாக கூறினார்.

அரக்கோணம் தெய்வச் செயல் விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக கொள்ளையடித்த ஆட்சி என்றும், சாத்தான்குளம், தூத்துக்குடி என பல்வேறு சம்பவங்கள் இருக்கிறது என்றும் அவற்றைப் பற்றி சொல்ல நேரம் போதாது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு இப்படியொரு மவுசா?... பாஜக, அதிமுக தலையில் இறங்கியது இடி...!

அரைத்த மாவையே இபிஎஸ் அரைத்து வருவதாகவும் அவருக்கு பதில் சொல்லி தன் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜூன் 12ல்.. மேட்டூர் அணையில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர்..! திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!