இன்று பிற்பகல்ல ஆட்டோ ஓட்டிநர் பிரசாத் என்பவரும் மக்கள் நீதி மையத்தின் மாநில மகளி செயலாக்க கூடிய நேகா மோகன்தாஸ் என்பவருக்கும் இடையே மோதலானது ஏற்பட்டு அந்த வீடியோ சமூக வலைத்தளங்களல் வெளியானது. இந்த விவகாரத்தில ஏற்கனவே ஆட்டோ ஓட்டிநர் பிரசாத் மீது பெண் வன்கொடுமை ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டிநர் பிரசாத் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது மக்கள் நீதி மைய நிர்வாகி சினேகா மோகன்தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மயிலாப்பூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இந்த வீடியோ அடிப்படையில ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் பெண் என்றும் பாராமல் அவர் தாக்கியதால் தான் பெண் வன்கொடுமை உள்ளிட்ட சட்டத்தின் கீழ் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டதாகவும், ஆபாசமாக பேசி செருப்பால் தாக்கியதால் தற்போது சினேகா மீது இரண்டு பிரிவின் கீழ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு பிரிவுகளும் ஜாமீனில் நிறைவேறக்கூடிய பிரிவுகள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ ஓட்டுனர் வேகமாகவும் அதேபோல கூகுள் மேப்பை ஆப் செய்துவிட்டு தாறுமாறாகவும் ஆட்டோ ஓட்டியதால் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதங்கள் வெடித்தன. இதனையடுத்து சினேகா ஆட்டோ சாவியை எடுக்க சென்ற போது, ஆட்டோ ஓட்டுநர் முதலில் தாக்கியதால் தான் அவரை செருப்பால் பொதுமக்கள் முன்னிலையில் அடித்ததாகவும் போலீசாரிடம் சினேகா மோகன்தாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க நினைத்தால்... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே!