நம்முடைய இளைஞர்களுக்கு இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய இந்த ஆட்சி தொடர வேண்டும். பெண்களுக்காக, இளைஞர்களுக்காக, விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். நம்முடைய மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர் கீதா ஜீவனுக்கு அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் கனிமொழி எம்பி பிரச்சாரம்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் கீதா ஜீவனை ஆதரித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவருவுச்சிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கினர்
பின்னர் அமைச்சர் கீதா ஜீவனை ஆதரித்து கனிமொழியின் எம் பி பேசும்போது: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு அறிமுகம் தேவை இல்லை. உங்களுக்கும் அவரை தெரியும், அவருக்கும் உங்களை தெரியும், ஒவ்வொருத்தரையும் நன்றாக தெரியும்.
இதையும் படிங்க: காப்பி அடிச்சது ADMK தான்... திமுக ஆட்சியில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றம்... கனிமொழி MP பிரஸ்மீட்..!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரியத்தில் வந்திருக்கக்கூடிய வேட்பாளர் தலைவர் கலைஞர் அவர்கள் முரட்டு பக்தன் என்று அன்போடு அழைத்த பெரியவர் பெரியசாமி அவர்களுடைய மகள், இன்று உங்களை எல்லாம் வாக்கு கேட்டு இந்த பிரச்சாரத்தை தொடங்குகிறார்கள்.
அமைச்சராக தமிழக முதலமைச்சரிடம் பாராட்டு பெறக்கூடிய அளவிற்கு பணி ஆற்றியவர். தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த மக்கள் எந்த நேரத்தில் அழைத்தாலும் தன்னுடைய தொலைபேசியை எடுத்து அவர்களுடைய பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார். எனவே அவருக்கு உங்களுடைய வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அழித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் நம் கண் முன்னே தூத்துக்குடியின் வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மழை வந்தபோது தண்ணீர் தேங்கி நாம் எவ்வளவோ தவித்து இருக்கிறோம். நானும் கீதா ஜீவனும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இங்கே கொஞ்சம் மோட்டரை வைத்து தண்ணீரை அகற்றங்கள் என்று கெஞ்சிய காலங்கள் எல்லாம் போய், இன்று மழை வந்தால் நம்முடைய முதலமைச்சர் கொண்டு வந்துள்ள வடிகால் திட்டத்தால் மழை வந்தால் தண்ணீர் தேங்காமல் மக்கள் நிம்மதியாக இருக்கக்கூடிய சூழ்நிலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தூத்துக்குடியில் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எல்லாம் பொறாமை படக்கூடிய அளவில் மக்கள் பயன்படக்கூடிய வளர்ச்சி திட்டங்களை நம்முடைய தமிழக முதல்வர் அளித்திருக்கிறார்கள். வின் பாஸ்ட் என்ற கார் தொழிற்சாலை அடிக்கல் நாட்டப்பட்டு 18 மாதங்களில் முதல் கார் வெளியே வரும்போதும் நமது முதலமைச்சர் அவர்கள் வந்தார்கள். இன்னும் பல தொழில் முதலீடுகள் நம் தூத்துக்குடிக்கு வர இருக்கிறது நம்முடைய இளைஞர்களுக்கு இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய இந்த ஆட்சி தொடர வேண்டும்.
பெண்களுக்காக, இளைஞர்களுக்காக, விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் உம்முடைய மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர் கீதா ஜீவனுக்கு அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: அரசியல் நாகரிகமோ, அறமோ அதிமுகவுக்கு இருந்ததே இல்ல... சி.வி. சண்முகத்தை வெளுத்த கனிமொழி..!!