திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்காக அழைப்பு விடுத்திருந்தார்.
அதிமுக கூட்டணிக்கு வருபவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம் என்று கூறியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டணிக்கான அழைப்பை கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிராகரித்து விட்டன.
பாஜக கூட கூட்டணியில் உள்ள அதிமுகவுடன் இணைய எப்படி கம்யூனிஸ்டுகளை அழைக்கிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. கூட்டணிக்காக கம்யூனிஸ்ட் கட்சிகளை அழைத்து இருந்த இபிஎஸ் தற்போது தனது சுற்றுப் பயணத்தின் போது கம்யூனிஸ்டு கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதையும் படிங்க: அடக் கடவுளே! எங்க இருக்கு சட்டம் ஒழுங்கு? பதில் சொல்லுங்க பொம்மை முதல்வரே! சாடிய இபிஎஸ்..!
கூட்டணிக்காக விடுத்த அழைப்பை நிராகரித்ததால் கம்யூனிஸ்ட் கட்சிகளை இபிஎஸ் கோபத்தில் விமர்சிக்கிறார் என்ற விமர்சனமும் அவ்வப்போது எழுந்துள்ளது.
இன்றைய கம்யூனிஸ்ட் காரர்கள் கூட்டணிக்காக கூவிக் கொண்டிருக்கிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். சென்னையில் போராடும் தூய்மை பணியாளர்களுக்காக கம்யூனிஸ்ட் கட்சி போராடியதா என்ற கேள்வியையும் முன் வைத்தார். கம்யூனிஸ்டுகளை குறிவைத்து இபிஎஸ் விமர்சிப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் முத்தரசன் பேசினார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாஜக தமிழ்நாட்டுக்கு பச்சையாக துரோகம் செய்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாக கூறினார். எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்துக்கு எல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சாது என்றும் தெரிவித்தார்.
தனிப்பட்ட முறையில் ஒருமையில் நாங்கள் இ.பி.எஸ்-ஐ விமர்சித்து இருக்கிறோமா என்று கேள்வி எழுப்பிய முத்தரசன், அரசியல் ரீதியாக மட்டுமே தாங்கள் விமர்சிப்பதாக தெரிவித்தார்.
பாஜகவின் எந்த கொள்கையில் அதிமுக ஒத்துப் போகிறது என்பதை விளக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: போயும் போயி குப்பைக்கு வரி போட்ட அரசு... திமுகவை டாரு, டாராக கிழித்த எடப்பாடி பழனிசாமி...!