இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தவெக நிர்வாகிகள் இருவரை, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீ ஸார் கைது செய்து இருக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்.
தவெக தூத்துக் குடி மேற்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர். இவரது நண்பரும், தவெக நிர்வாகியுமான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் என் பவரும் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாக காரில் அழைத்துச் சென்று ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கூட்டுப் பாலியல் வன்முறை செய்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாலமுருகன், ஜெயபால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மக்களின் பாதுகாப்பை தவெகவினர் சூறையாடுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது என்று கூறியுள்ளார். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, லஞ்சம் கேட்பது, மாமூல் கேட்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினர் தற்போது கற்பழிப்பு, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு மக்கள் பாதுகாப்பைச் சூறையாடி வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேராசிரியர்கள் இன்றி அள்ளாடும் பல்கலைக்கழகங்கள்...! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!!
இந்த லட்சணத்தில், முதல்வர் விஜய், பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை விடுத்து, முதலில் தான் வகிக்கும் பதவியின் பொறுப்பினை உணர்ந்து, தனது சொந்தக் கட்சியினரிடம் இருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டும் என்றும் அப்பொழுது தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்டதாரிகள் எதிர்காலத்தோட விளையாடாதீங்க... நியமனத்தை விரைவுபடுத்துங்க..! நயினார் வலியுறுத்தல்..!!