காவல்துறையினரின் தாக்குதலில் அஜித் குமார் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அனைவரின் கவனமும் நகை திருடுபோனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிகிதா மீது திரும்பியுள்ளது. ஏற்கனவே நிகிதா மீது பல்வேறு பணமோசடி புகார் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நிகிதா கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே கோவையில் உள்ள உணவகம் ஒன்றில் நிகிதா இருக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் நிகிதாவின் இணைய பக்கத்தில் அவர் பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அண்மையில் நடந்த முருகன் மாநாட்டில் நிகிதா கலந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: இது லாக்கப் டெத் இல்ல.. போலீஸ் செஞ்ச படுகொலை! முதல்வர் விளக்கம் கொடுத்தே ஆகணும்.. நயினார் திட்டவட்டம்..!

அதேபோல் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நிகிதா புகைப்படம் எடுத்து தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் நிதிகிதாவிற்கு உதவி செய்வது பாஜகவா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த புகைப்படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை.

ஆனால் பொதுவாக நாங்கள் ஒரு இடத்திற்கு செல்லும் போது, நிறைய பேர் புகைப்படம் எடுத்து கொள்வார்கள். புகைப்படம் எடுப்பவர்களின் பின்னணி என்ன என்பது எங்களுக்கு தெரியாது அல்லவா.. முருகன் மாநாட்டை முழுக்க முழுக்க நடத்தியது நாங்கள் தான். நிகிதா என்ற பெண்ணை நீங்கள் சொல்லிதான் எங்களுக்கு தெரியும். அதில் யாருடைய பங்களிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாங்கெல்லாம் அப்படி ஒரு FIT.. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்திய நயினார்..!