நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் டிடிவி தினகரன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, நேற்று சந்திர கிரகணம் போல தமிழகத்திலும் பல கிரகணங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. டிடிவி தினகரன் குறித்து ஏற்கனவே மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருக்கிறேன். 2001 இல் நடைபெற்ற தேர்தலில் என்னைப் போன்றவர்கள் உயரத்தில் வருவதற்கு அவர் காரணமாக இருந்தவர். அவரோடு எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இதுவரை இருந்ததில்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆசிர்வாதத்தோடு கட்சியில் மாநில தலைவராக தொடர்கிறேன். நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க: TTV வெளியேற நான் காரணமில்ல! ஆனா... மனம் திறந்த நயினார்
நெல்லை பூத் கமிட்டி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என அண்ணாமலைதான் கூறினார். அமித் ஷா தான் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கினார் எனக்கூறினார். அதாவது அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் எனக்கூறியதே டிடிவி தினகரனின் விலகலுக்கான முதன்மையான காரணம் என்பதை நயினார் நாகேந்திரன் இதன் மூலமாக பதிவு செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறீர்களா என செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பும் போது பல நாட்களாக டிடிவி தினகரன் என்னிடம் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். டிடிவி தினகரனிடம் பலமுறை நான் செல்போனில் முன்பெல்லாம் பேசி இருக்கிறேன்.சமீபத்தில் கூட திருச்சியில் நானும் அவரும் சந்தித்திருக்கிறோம்.அப்போது கூட எதுவும் பேசவில்லை.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களில் போட்டியிட்டார்கள் 2 சதவீதம் வாக்கு பெற்றார்கள். பெரிய கட்சி சிறிய கட்சி என்றெல்லாம் இல்லை. நான் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற காரணம் என்று கூறுவது எந்த அடிப்படையில் என எனக்கு தெரியவில்லை.அது என்ன காரணம் என்பது என எனக்கு விளங்கவில்லை.
அதை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே கூறியிருக்கலாம்.ஆரம்ப காலத்தில் இருந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நானும் கூறி வருகிறேன்.
இதையும் படிங்க: தேவர் சமூகம்… அதான் TTVக்கு நயினாரை பிடிக்கல! புது குண்டைத் தூக்கிப் போட்ட காயத்ரி ரகுராம்