தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை நைனார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜெயலலிதா காலத்தில் நைனார் நாகேந்திரனின் திறமையை பார்த்ததும் முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்ததாகவும் அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் அவர் இணைந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த முறை திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் தோல்வியடைவது உறுதி என்று கூறினார். நான்கு கோடி ரூபாய் வழக்கு திமுகவிடம் இருப்பதாகவும், நயினார் நாகேந்திரன் திமுகவிற்கு விலை போய் நீண்ட நாள் ஆகிவிட்டது எனவும் விமர்சித்தார். கரூரில் 41 பேர் கொலைக்கு காரணம் செந்தில் பாலாஜி என்று மட்டும் தான் நயினார் நாகேந்திரன் பேசி இருப்பதாகவும், வேறு எந்த அமைச்சரை பற்றியும் நைனார் பேசியதில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஏதேனும் டம்மி வேட்பாளரை திமுக களமிறக்கினால் தான் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற முடியும் என்றும் அவர் திமுகவிற்கு கைக்கூலியாகவும், அடிமையாகவும் இருக்கிறார் எனவும் விமர்சித்துள்ளார். 2006 இல் திமுகவோடு காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லை என்றால் திமுகவின் அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் என்றும் திமுகவை காப்பாற்றியதே காங்கிரஸ்தான் எனவும் கூறினார். கடுமையான சூழ்நிலையில் பாஜகவை காப்பாற்ற இருந்தது திமுக என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "விசில்"..! இது அனைத்து மக்களுக்குமான சின்னம்..! TVK நிர்மல் குமார் நெகிழ்ச்சி..!
மாணிக்கம் தாகூர் பேசியதை தான் பார்த்ததாகவும், அவர்கள் கமிஷனோ அல்லது வேறு எதுவுமே கேட்கவில்லை என்று கூறிய அவர், மரியாதையை தான் அவர்கள் கேட்பதாகவும் நியாயமான கருத்து என்றும் தெரிவித்தார். சோனியா காந்தி தான் திமுகவை இந்த அளவுக்கு வளர்ந்து கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: DMK FILES...! டி.ஆர். பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை... சரமாரி கேள்வி..!