நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இன்று காரைக்குடி தேர்தல் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வு, கட்சியின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளில் முதல் நிகழ்வாகக் கருதப்படுகிறது. சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தொகுதியைத் தேர்ந்தெடுத்திருப்பது, அவரது அரசியல் உத்தியில் முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
திருச்சியில் நடைபெற்ற ‘மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு’ என்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கான முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ஆண்கள் 117 பேரும், பெண்கள் 117 பேரும் இடம்பெற்றிருந்தனர். காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுவது, அந்தத் தொகுதியை ‘நட்சத்திரத் தொகுதி’யாக மாற்றியுள்ளது. கடந்த சில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் இருந்த இந்தத் தொகுதியில், சீமானின் வருகை மூன்று முனைப் போட்டியை உருவாக்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் சீமான் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தனது மனைவி மற்றும் தாயாருடன் சென்று இருந்த சீமான் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை கொடுத்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை உரைவினைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் வாங்க வேண்டும் என உங்களிடம் கூப்பன் கேட்டது யார்? எனவும் கேட்டார். கூப்பன் வேண்டும் என யாராவது உங்களிடம் கேட்டார்களா என்ற சீமான் கேள்வி எழுப்பினார். மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷினுக்காக எம் மக்களை அலையவிட்டது தான் திராவிட கட்சிகளின் சாதனை என்றும் சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "உழைக்கும் மக்கள் சின்னம்... விவசாயி சின்னம்"..! காரைக்குடியில் பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த சீமான்..!!
நான் திரள்நிதி வாங்குகிறேன் என்றும் ஆனால் திமுக திருட்டு நிதி வாங்குகிறது எனவும் தெரிவித்தார். மானத்தையும் ரோஷத்தையும் அடகு வைக்கும் கூட்டமாக மாறிவிட்டோமா எனவும் கேள்வி எழுப்பினார். இலவச பேருந்து யாராவது கேட்டார்களா என்றும் தரமான பேருந்துகளை தான் கேட்கிறார்கள் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பற்றாகுறை இருப்பதாகவும், பின்னர் எதற்காக இப்படி இலவசங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் கேட்டுள்ளார். தினமும் பாலியல் தொல்லைகள் நடப்பதாகவும், அதற்காக பாலியல் தொழில் செய்ய விடுதிகள் திறக்க முடியுமா என்று காட்டமாக கேட்டார்.
இதையும் படிங்க: நான் ரியல் பிக்பாஸ்... என்னை ஜெயிக்க வைங்க..! சீமான் ஃபயர் ஸ்பீச்..!!