வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்த உள்ளார். இந்த ஒரே மேடையில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து, தனது தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்குகிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவும், அதிமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டையே இறுதி செய்யாமல் உள்ளன. ஆனால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கம் போல தனித்துப் போட்டி என அறிவித்ததோடு, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்த உள்ளார். இந்த ஒரே மேடையில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து, தனது தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்குகிறார்.
இதையும் படிங்க: எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? பெண்கள் மீதும் அடக்குமுறை...! சீமான் கண்டனம்..!
இந்த முறை சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவரது சொந்த ஊரான சிவகங்கையில் சீமானின் தாயார் மாநாட்டு வேலைகளை தீவிரமாக செய்து வருகிறார். திருச்சியில் நடக்கவுள்ள பிரம்மாண்ட மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வரவேற்று வருகிறார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வட மாவட்டமான கடலூரில் போட்டியிட்டார். 2021-ஆம் ஆண்டு தேர்தலில் சென்னையை ஒட்டியுள்ள திருவொற்றியூர் தொகுதியில் களம் கண்டார். தற்போது வரை வட மாவட்டங்களிலும், தலைநகரிலும் களம் கண்ட சீமான், இந்த முறை தென் மாவட்ட வாக்காளர்களின் ஆதரவைப் பெருமளவில் ஈர்க்கும் நோக்கில் காரைக்குடியைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீமான் தனது சொந்த மண்ணில் போட்டியிடுவது தொடர்பான தகவல் அந்த மாவட்டத் தொண்டர்களிடையே மட்டுமல்ல அவரது குடும்பத்தினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: கைது செய்யப்பட்ட சீமான்.. பின்னர் விடுவிப்பு..!! வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது என்ன..??