கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் விஜயின் கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகளுக்கு அந்த கட்சிகளே கடும் கட்டுப்பாடு போட்டுள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டி கூட்டத்தில் 5000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் வழக்கம்போல் விஜயை பார்க்க ஏராளமானவர்கள் கூடினர். 5 ஆயிரத்தை விட அதிகமானவர்கள் கூடினர். மதிய வேளையில் மீட்டிங் நடந்ததால் வெயில் வாட்டி வதைத்தது. நாற்காலிகள் எதுவும் போடப்படாததால் நிர்வாகிகள் கால்கடுக்க நின்றனர். வெயில் தாங்க முடியாமல் ஆங்காங்கே சிலர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சூரஜ் என்பவர் இறந்தார். அவரது உடல்நிலை மோசமான நிலையில் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார்.முதற்கட்ட விசாரணையில் அவர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு 35 வயது ஆவதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: இன்னும் டைம் இருக்கு..! தவெக சார்பில் விருப்ப மனுக்கள் கொடுக்க அவகாசம்... கட்சி தலைமை அறிவிப்பு..!
இவரது உடல் சேலம் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவமனை பிணவறை முன்பு சூரஜ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரண்டு உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இதுவரை யாரும் வந்து சந்திக்கவில்லை , ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை் அவர்களது குடும்பத்தை யார் காப்பாற்றுவது?. குடும்பத்தை காப்பாற்றுவதற்கு விஜய் கட்சியின் சார்பில் உதவி செய்ய வேண்டும் அதுவரை உடலை பெற மாட்டோம், என சூரஜ் நண்பர் சுபாஷ் உறுதியாக தெரிவித்துள்ளார். அதேபோல் சூரஜின் மாமனார் லட்சுமணனும் நிவாரணம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அவரு அப்படி பேசுற ஆளு இல்லங்க..! இருந்தாலும்... நயினாருக்கு அறிவுரை சொன்ன TTV தினகரன்..!