நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்எம் நரவணேயின் புத்தகத்தில் உள்ள குறிப்புகளை மேற்கோள் காட்ட முயன்றார். ஆனால் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஓம் பிர்லா ராகுலுக்கு பேச அனுமதி மறுத்தார்.
இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், புதன்கிழமை மாலை பிரதமர் மோடி உரை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென உரையை ரத்து செய்த ஓம் பிர்லா, அவையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: போனா போகட்டும்! இனி வேண்டாம்! திமுக முடிவு! காங்கிரசை கழட்டி விட திட்டம்! கூட்டணியில் அதிர்ச்சி!
இதற்கு விளக்கமளித்த ஓம் பிர்லா, எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டதால், அவரை அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியதாக கூறினார். இந்த குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளை கொதிப்படையச் செய்தது. காங்கிரஸ் தலைவர் கேசி வேணுகோபால், "மக்களவையில் எதிர்க்கட்சிக்கு இடமில்லை. ஓம் பிர்லாவின் போக்கு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்" என்று விமர்சித்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் விவாதித்து, ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதற்கு 20 நாட்கள் அவகாசம் தேவை என்பதால், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் இது கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், டிஎம்சி உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓம் பிர்லா பாரபட்சம் காட்டுகிறார், எதிர்க்கட்சியை அடக்குகிறார் என்பது அவர்கள் குற்றச்சாட்டு. இது நாடாளுமன்ற வரலாற்றில் அரிதான நிகழ்வு.
பிரதமர் மோடி அரசு இதை எதிர்கொள்ளும் விதம் கவனத்தை ஈர்த்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தை காப்பாற்ற போராடுகின்றன என்கின்றனர். நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: 3வது நாளாக தொடரும் அமளி!! லோக்சபா ஒத்திவைப்பு! பிப்.,9 காலை வரை ஒத்திவைத்து ஓம்பிர்லா அறிவிப்பு!