எடப்பாடி பழனிச்சாமி தனது சுயநலத்திற்காக அதிமுகவை ஒன்றிணைய விடாமல் தடுத்து வருவதாக, ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் குற்றச்சாட்டு
பிரிந்து சென்ற அதிமுகவினரை ஒன்றிணைக்க வேண்டும், அதற்கு பத்து நாட்கள் கெடு விதிப்பதாக தெரிவித்த கே.ஏ.செங்கோட்டையனை கட்சி பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்து எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை மேற்கொண்டார். அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். இதனால் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து செங்கோட்டையன் முறையிட்டார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தொடர்ந்து அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கே.ஏ. செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அவரை சந்தித்து சென்றிருந்த நிலையில், இன்று அரியலூர் மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் செங்கோட்டையனை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்ததற்காக நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அம்மா ஆத்மா சும்மா விடாது! வயிற்றெரிச்சல் பிடிச்ச மனுஷங்க... கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்
அரியலூர் மாவட்ட ஓபிஎஸ் அணி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள், கோபிசெட்டிபாளையத்தில் கே ஏ செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர் பேட்டி அளித்த அவர்கள், எடப்பாடி பழனிசாமி தனக்கு பதவி இருந்தால் போதும் என்ற மனநிலையில் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் மதிக்காமல் அனைவரையும் வெளியேற்றும் செயலை செய்து வருகிறார்.
அனைவரும் ஒன்றிணைத்தால் மட்டுமே அதிமுகவை வலுப்படுத்த முடியும். குறுக்கு வழியில் வந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இணைவதை தடுத்து வருகிறார். சுயநலத்திற்காக அதிமுகவை ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான பணியில் ஈடுபட்டு இருக்கிறார். கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது் விரைவில் ஒற்றுமை ஏற்படும் பொறுமையாக காத்திருங்கள் என அவர் சொல்லி இருக்கிறார். அவர் ஏதாவது செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களது மகிழ்ச்சியும் ஆதரவையும் அவருக்கு தெரிவித்துள்ளோம் எனக்கூறினர்.
இதையும் படிங்க: “டிடிவி-கிட்ட எவ்வளவோ சொன்னேன்... கேட்கலையே??” - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அண்ணாமலை...!