மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி ஓபிஎஸ் வெளியேறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப டிடிவி தினகரன் ஒ.பி.எஸ். மீண்டும் வர வேண்டும். NDAவில் இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றேன். இரண்டு தலைவர்களிடம் தொலைபேசியில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதைத்தான் நான் சொல்றேன். ஆனா டி டிவி அவர்களிடம் குறிப்பா அதே கருத்தை வலியுறுத்திக்கிட்டு இருக்கேன். முதல்ல இருந்து கொஞ்சம் பொறுத்து இருப்போம். ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். எப்பொழுதுமே ஒரு முடிவு எடுத்த பிறகு கொஞ்சம் காலம் கொடுத்தீங்கன்னா?, எல்லோருக்கும் அந்த டைம் வேணும் செட்டில் ஆகுறதுக்கு. எனவே உடனடியாக ஒரு முடிவு எடுத்த பிறகு அவர்களும் வருத்தில் எடுத்திருப்பாங்க. ஆனால் கொஞ்சம் பொறுத்து இருப்போம் காலம் கனிந்து வரட்டும் அதுவரை எல்லோரும் எங்களுடைய முயற்சிகளை செய்து கொண்டே இருக்கும்.
அவங்களுடைய தரப்பிலிருந்து அவங்க கொடுத்திருக்காங்க. அதை பத்தி நான் இப்ப கருத்து சொல்ல விரும்பவில்லை. பாரதி ஜனதா கட்சி ஒரு நிலைப்பாடு உங்களுக்கு தெரியும் .நாம் எப்பொழுதுமே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா தெய்வத்திருமகன் அவர்கள் வந்து கடவுளா நம்ம நினைச்சுக்கிட்டு இருக்கிறோம். எப்பொழுதும் அவருக்கு அந்த மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதே நேரத்துல இமானுவேல் சேகரன் அய்யாவினுடைய விழாவிற்கு எல்லா ஆண்டும் கூட பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்கள் எல்லோரும் போய்க்கொண்டிருக்காங்க.
நானும் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றோம். அதனால் எங்களைப் பொறுத்தவரை ஏதும் சர்ச்சையாக நான் பார்க்கவில்லை, பொறுத்திருப்போம். இது ஒரு பெரிய விஷயமாக நான் பார்க்கலைன்னா, எல்லோரும் அவங்கவங்க கருத்தை வைத்திருக்கிறார்கள். அதனால் இது எங்கேயும் சண்டை ஏற்படுவதற்கான ஒரு சூழ்நிலை அப்படிலாம் பாக்கல. மறுபடியும் அதேதான் காலம் இருக்கிறது. பொறுத்திருப்போம்.
இதையும் படிங்க: சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை அதிமுகவுக்குள் கொண்டு வர துடிதுடியாய் செங்கோட்டையன்... பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் காரணம்...!
நான் ஏற்கனவே சொன்னது போல காலம் கனிந்து வரட்டும் கொஞ்சம் பொறுமையா இருப்போம். எனக்கே திரும்ப திரும்ப நோண்டி குத்தி, இப்படி சொன்னாங்க அப்படி சொன்னாங்க. நீங்க என்ன சொல்றீங்க அப்படிங்கறது அரசியல்ல சரியாக இருக்காது. டிடிவி தினகரன் அண்ணனை பொறுத்தவரை நான் தொடர்ந்து சொல்வது இதுதான், அவர் ஒரு நல்ல தலைவர். பாரதிய ஜனதா கட்சி தமிழக வழிநடத்திக் கொண்டிருக்க கூடிய அண்ணன் நைனார் நாகேந்திரன் அவர்கள் எங்களுடைய தலைவர். அதனால் இங்கேயும் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் இருக்காது. தேர்தலுக்கு இன்னும் ஏழு எட்டு மாச இருக்கும்போது ஏன் அவசரப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அண்ணாமலையால் பலி கிடா ஆன நயினார் நாகேந்திரன்... டிடிவி தினகரன் விலகலுக்கு காரணம் இதுவா?