டெல்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் மையத்தில் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் யாதவ் எழுதிய "ஜனநாயக குறைபாட்டை எதிர்த்துப் போராடுதல்" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, நீங்கள் சொல்வதை போல இந்தியா கூட்டணியின் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமானதாக இல்லை. மிருதுஞ்சய் சிங் யாதவுக்கு இந்தியா கூட்டணி இன்னும் அப்படியே இருப்பதாக அவர் நினைப்பதாகத் தெரிகிறது.

எனக்கு அப்படி தெரியவில்லை. இந்தியா கூட்டணி முழுமையாக அப்படியே உடையாமல் இருந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். ஆனால் அது பலவீனமாகத் தெரிகிறது. இந்த பலவீனத்தை சரி செய்து, கூட்டணியை இன்னும் வலுவாக்க முடியும். அதற்கான போதிய நேரம் இருக்கிறது. எனது அனுபவத்திலும், வரலாற்று படிப்பினையிலும் சொல்கிறேன். பாஜகவைப் போல வலிமையான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சி வேறு எதுவும் இருந்ததில்லை.
இதையும் படிங்க: துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க முடியுமா.? பாயிண்டைப் பிடித்த பாஜக!!

ஒவ்வொரு துறையிலும் அது வலிமையானதாக இருக்கிறது. பாஜகவை அரசியல் கட்சி என்பதை விட ஒரு இயந்திரம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். பாஜக ஒரு இயந்திரம். அதை பின்னாலிருந்து வேறு ஒரு இயந்திரம் இயக்குகிறது. இரண்டு இயந்திரங்களும் சேர்ந்து, தேர்தல் ஆணையம் முதல் நாட்டின் கடைகோடியில் உள்ள காவல் நிலையம் வரை அனைத்து இயந்திரங்களையும் கட்டுப்படுத்துகின்றன.

இதை எதிர்த்துதான் இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி போராடுகிறது. வலிமையான இயந்திரத்தை அனைத்து முனைகளிலிருந்தும் நாம் எதிர்கொள்ள வேண்டும். இந்த புத்தகத்திலிருந்து நான் பெறும் செய்தி ஒன்றுதான். ஒன்று 2029 நாடாளுமன்ற தேர்தலில் நாம் வலுவான ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். அல்லது நாம் சரி செய்ய முடியாத இடத்திற்கு சென்றுவிடுவோம். அந்த வகையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானதாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களுக்கு ஆதரவா பேசுனா பத்தாது.. செயலில் காட்டணும்.. வக்பு சட்டம் தொடர்பாக திமுகவை டார்கெட் செய்யும் விஜய்!