நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குத்திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது.
மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளான பீட்டர் அல்போன்ஸ், தனுஷ்கோடி ஆதித்தன், திருநாவுக்கரசு, எம் பி விஜய் வசந்த் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.அப்போது உரையாற்றிய ப.சிதம்பரம், 10 நிமிடங்கள் தான் பேசப்போகிறேன். சுருக்கமாக செய்திகளை பேசப்போகிறேன்.வாக்கு திருட்டு என்றால் என்ன. வாழ்க்கை திருட முடியுமா. போலீ வாக்கு சீட்டை போட முடியும் என்பது நமக்கு தெரியும்.
இதையும் படிங்க: தீவிர தேடுதல் வேட்டை! தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டு கொலை...
பலரை வாக்கு போடாமல் தடுப்பது. குறிப்பாக தலித் சமுதாயத்தினரை பல மாநிலங்களில் சிறுபான்மை சமுதாயத்தினரை வாக்கு போடாமல் தடுப்பது என்பது நமக்கு தெரியும். வாக்குத்திருட்டு என்பது நமக்கு அறிமுகம் இல்லாதது.இதைப்போன்று ஒரு தில்லுமுல்லு நடைபெறுகிறது என்பதை தற்போது நமக்கு தெரிந்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், பாஜக வேட்பாளர்கள் இருந்தார்கள்.இதிலே மூன்று தொகுதிகளில் பாஜக வேட்பாளர் முன்னணியில் இருந்தார். மன்சூர் கான் நமது வேட்பாளர் முன்னணியில் இருந்தார். 88 ஆயிரம் வாக்குகள் முன்னணியில் இருந்தார்.ஒரு சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் முன்னணியில் ஒருவர் எப்படி இருக்க முடியும்.
அனைத்தையும் ராகுல் காந்தி வெளியே கொண்டு வந்தார். அதை இருட்டடிக்கும் நிலை உள்ளது.Xy என பலருக்கு பெயர் உள்ளது.பலருக்கு வீட்டு எண் பூஜ்யம் என இருந்துள்ளது. இதையெல்லாம் தேர்தல் ஆணையத்திடம் அம்பலப்படுத்திய பிறகும் விசாரணை இல்லாமல் இருக்கிறது.போலியான வாக்காளர்களை சேர்ப்பது. உண்மையான வாக்காளர்களை நீக்குவது.ஒரே முகவரியில் 130 பேர் என வாக்காளர்களை சேர்ப்பது.இப்படித்தான் தேர்தல் நடந்திருக்கிறது.
இன்றைக்கும் பல அதிர்ச்சியான செய்திகள் வந்திருக்கிறது.பீகாரில் ஒரு தொகுதியில் 58 பேர் இறந்ததாக அவர்கள் பெயரை நீக்கி உள்ளார்கள்.58 பேரில் 50 பேர் இளைஞர்கள். இயற்கையில் மூத்தவர்கள் இறப்பார்கள் இளையவர்கள் வாழ்வார்கள்.இது எப்படி நடக்கும். இது இயற்கைக்கு நேர் விரோதமானது.அங்கன்வாடி கேந்திரா வாக்குச்சாவடியில் 627 பேரை நீக்கி உள்ளார்கள். அவர்கள் அனைவருமே குடிபெயர்ந்து விட்டார்களாம்.வாக்கு திருட்டு பீகார் கர்நாடகா, மகாராஷ்டிராவிலும் நடந்திருக்கிறது என்று ராகுல் காந்தி சுட்டிக்காட்டி இருக்கிறார்.அதற்கான ஆதாரங்களும் வெளியிடப் போகிறார்.
தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடக்கலாம். அதற்கான பாஜக சதிவலை பின்னிக் கொண்டிருக்கிறது. ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த இடமும் உருப்படாது என்று பழமொழி இருக்கிறது.பாரதிய ஜனதா புகுந்த நாடு உருப்படாது.
அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள். மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.பாஜக வோடு அதிமுக கூட்டணி வைத்திருப்பதால் தமிழகத்தில் வாக்குத்திருட்டு நடைபெறும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: CANCER நோயாளிகளுக்கு விடிவுகாலம் பிறந்தாச்சு.. சாதித்த ரஷ்யா.. பயன்பாட்டிற்கு வரும் தடுப்பூசி..?