• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பழனி நில மோசடி விவகாரம்..! சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    பழனி நில மோசடி விவகாரத்தை சிவிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
    Author By Nila Mon, 24 Aug 2026 17:44:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    palani land issue case

    பழனி அருகே அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டது. இந்த நிலம் பக்தர்களுக்கான வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. நீண்டகாலமாக இந்த நிலம் மடத்திற்குச் சொந்தமானது என்பதும், அதை விற்கவோ மாற்றவோ கூடாது என்பதும் நீதிமன்ற உத்தரவுகளாலும் அறநிலையத்துறை எச்சரிக்கைகளாலும் தெளிவாக்கப்பட்டிருந்தது.

    இருப்பினும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த நிலம் தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. வெறும் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் கிரயப் பத்திரம் தயாரிக்கப்பட்டு, ஜூலை 6 ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த பத்திரப்பதிவை முற்றிலும் செல்லாதது என்று அறிவித்து ரத்து செய்தது. தமிழக அரசு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது. சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

    நிலத்தை விற்றதாகக் கூறப்படும் அறக்கட்டளை நிர்வாகி, வாங்கிய இருவர், பத்திரம் தயாரிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சார்பதிவாளர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பல ஆவணங்கள், தொலைபேசி அழைப்பு விவரங்கள், சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டன. சில அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். விசாரணை தொடர்ந்தபோது ஒரு முக்கிய குற்றவாளி சிறையில் உயிரிழந்ததும், மற்றொருவருக்கு உடல்நலக் குறைவும் கூடுதல் கவனத்தை ஈர்த்தன.இந்த வழக்கில் உள்ள சிக்கல்கள் ஆழமானவை என்றும், அரசு கட்டுப்பாட்டிலுள்ள சிபிசிஐடி விசாரணை போதுமானதாக இல்லை என்றும் கருதிய சிலர் சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    இதையும் படிங்க: பழனி கோவில் நில மோசடி எதிரொலி.. சார்பதிவாளர் உள்ளிட்ட 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    Case denied

    பழனி நகராட்சித் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்தனர். அவர்கள் கூறியதாவது, நிலத்தின் உண்மையான மதிப்பும் பதிவு செய்யப்பட்ட தொகையும் இடையேயான பெரும் இடைவெளி, அதிகாரிகளின் ஈடுபாடு, போலி ஆவணங்களின் தொடர், நிதிப் பரிவர்த்தனைகளின் மர்மம் ஆகியவை சுயாதீன விசாரணையைத் தேவைப்படுத்துகின்றன. அரசுத் துறைகளுக்குள் உள்ள தொடர்புகள் காரணமாக முழு உண்மை வெளிவராமல் போகலாம் என்ற அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர். நீதிமன்றம் இந்த மனுக்களை விசாரித்தது. சிபிசிஐடி தரப்பில் விசாரணை முன்னேற்ற அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பல கைதுகள் நடந்துள்ளன.

    சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று அரசுத் தரப்பு வாதிட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை என்ற நிலைப்பாடு முன்வைக்கப்பட்டது. நீதிமன்றம் விசாரணையின் முன்னேற்றத்தைக் கவனித்து, மனுக்களை மேலும் விசாரணைக்கு ஒத்திவைத்தது. பின்னர் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணையைத் தொடர அனுமதித்து, தற்போதைய நிலையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை என்று முடிவு செய்து வழக்கை தள்ளுபடி செய்தனர். 

    இதையும் படிங்க: பழனி கோவில் நில மோசடி விவகாரம்..! மேலும் 2 பேர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை..!!

    மேலும் படிங்க
    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாளை பொது விடுமுறை!

    மதுராந்தகம் இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாளை பொது விடுமுறை!

    தமிழ்நாடு
    ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

    ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    "காமாட்சி விளக்கும், புடவையும்"..! தூய சக்தியின் தூய அரசியலை பாருங்க..! செந்தில் பாலாஜி விளாசல்.!!

    "காமாட்சி விளக்கும், புடவையும்"..! தூய சக்தியின் தூய அரசியலை பாருங்க..! செந்தில் பாலாஜி விளாசல்.!!

    தமிழ்நாடு
    அதெப்படி குறையும்..?மரகதம் குமரவேல் வருமான வரி கணக்கு..! அதிமுக கேள்வி..!

    அதெப்படி குறையும்..?மரகதம் குமரவேல் வருமான வரி கணக்கு..! அதிமுக கேள்வி..!

    தமிழ்நாடு
    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share