தமிழக மீனர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்பாக இந்தியாவும் இலங்கையும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியெடுத்திருக்கிறார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், இலங்கை மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு இந்தியா தீர்வு காண வேண்டும். குறிப்பாக வெளியுறவு துறை அமைச்சகம் இலங்கையுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். ஏனென்றால் இந்தியா இலங்கை இடையிலான நட்புறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

அதை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டியதும், தமிழக மீனவர்கள் அதேபோல இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதும் வெளியுறவு துறையின் கட்டாயமாக இருக்கிறது. எனவே உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி இதுபோன்ற மீனவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடல் எல்லைகள் குறித்த புரிதலையும், மீனவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது இரு நாட்டு அரசின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸின் பாக்., விசுவாசிகளே... இந்தியாவை விட்டு ஓடிவிடுங்கள்... பவன் கல்யாண் ஆவேசம்..!

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் , இந்தியாவும் இலங்கையும் பகிர்ந்து கொள்ளும் நீண்டகால நல்லுறவு மற்றும் அன்பான உறவின் வெளிச்சத்தில், மீண்டும் மீண்டும் இந்த சம்பவங்கள் நிகழ்கின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில் இணக்கமான முறையில் செயல்பட்டு வெளியுறவு அமைச்சகம் தீர்வு காணவேண்டும். இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் பரஸ்பர ஒத்துழைப்புடன் இவற்றை தீர்க்க ஆக்கபூர்வமான மற்றும் நீடித்த உரையாடலில் ஈடுபடுவது கட்டாயமாகும்.

இரு தரப்பு மீனவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் நிலைநிறுத்தவும், பரஸ்பர புரிதல் மற்றும் நல்லெண்ணத்தின் மூலம் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு கிராம மக்களே வெறுங்காலுடன்... உடனே அனைவருக்கும் செருப்பை ஆர்டர் செய்த பவன் கல்யாண்!