ரோம்: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு 'மெலோடி' சாக்லேட்டை பரிசளித்த பிரதமர் நரேந்திர மோடி, இருவரும் கலகலப்பாக சிரித்த தருணம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தனது பயணத்தின் இறுதிக் கட்டமாக இத்தாலிக்கு வந்தார். இத்தாலி தலைநகர் ரோமில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார்.
இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். சந்திப்பின் முடிவில் பிரதமர் மோடி, இத்தாலி பிரதமருக்கு 'மெலோடி' என்ற பிரபல இந்திய சாக்லேட்டை பரிசாக அளித்தார்.
இதையும் படிங்க: நியாபகம் இருக்கா 'Melodi'!! இத்தாலி பிரதமர் மெலோனியை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி!
இந்தப் பரிசைப் பார்த்ததும் மெலோனி மகிழ்ச்சியில் துள்ளினார். தனது பெயரான 'மெலோனி' உடன் ஒத்துப்போகும் 'மெலோடி' சாக்லேட்டைப் பார்த்து இருவரும் இணைந்து கலகலப்பாக சிரித்தனர். மெலோனி இந்த தருணத்தை செல்பி வீடியோவாக பதிவு செய்தார்.
Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026
இந்த வீடியோவை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த இத்தாலி பிரதமர், “இந்த அழகான பரிசுக்கு நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த இனிமையான தருணம் உலக அளவில் வைரலாகி, இரு தலைவர்களுக்கும் இடையேயான நல்லுறவை பிரதிபலிக்கும் வகையில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த சந்திப்பு இந்தியா - இத்தாலி இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் பல முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்த இனிமையான சம்பவம் உலகத் தலைவர்களிடையேயும், மக்களிடையேயும் நல்ல எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டு தலைவர்களின் நட்பான தோரணை பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த வீடியோ தொடர்ந்து சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: கோவையிலும் வந்தாச்சு ஜாம்பி போதை!! இளசுகள் டார்கெட்! பதறும் பெற்றோர்கள்!