தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க முன் வராத திமுக அரசு, சமூக நீதி பற்றி பேசுவதா? பர்கூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர். அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூரில் நடந்தது. பர்கூர் பாரத கோவிலில் தொடங்கிய நடைபயணம், பர்கூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு பொதுக் கூட்டம் நடந்தது.
அக்கூட்டத்தில் பேசிய பா.ம.க. தலைவர் டாக்டர். அன்புமணி, தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வர வேண்டும். இதற்காக தான் நான் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறேன். தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தான் இந்த நடைபயணம். நான் ஓட்டு கேட்க இங்கு வரவில்லை. வருகிற 6 மாதத்தில் தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் தமிழக மக்கள் முக்கியமான முடிவு எடுக்க வேண்டும். இந்த தேர்தலில் யார் வர வேண்டும என்பதை விட யார் வர கூடாது என்பதில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். தி.மு.க. வரக்கூடாது. நான் எங்கு சென்றாலும் இதே பதிலை தான் மக்கள் சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: அன்புமணி மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்...
கடந்த 3 தேர்தல்களில் தமிழக மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தீர்கள். 2019 நாடாளுமன்ற தர்தலில் 39 தொகுதிகளில் தி.மு.க.வை வெற்றி பெற செய்தீர்கள். 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கொடுத்தீர்கள். மீண்டும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40&க்கு 40 வெற்றியை கொடுத்தீர்கள். 3 தேர்தலில் வெற்றியை நீங்கள் கொடுத்தீர்கள். அவர்கள் உங்களுக்கு கொடுத்தது பட்டை நாமம். உங்களை அவர்கள் ஏமாற்றி உள்ளார்கள். பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயிகள் இன்று கோபத்தில் உள்ளனர். சென்னையில் துப்புரவு பணியாளர்களை திடீரென்று வேலையை விட்டு நீக்கினார்கள். போராட்டம் செய்த அவர்களை இரவில் கைது செய்தார்கள். இதையெல்லாம் நாம் மறக்க முடியுமா. இது மோசமான ஆட்சி. கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்தது. இது பிரிக்கப்பட்டு இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. கிரானைட் கொள்ளை இந்த மாவட்டத்தில் அதிக அளவில் நடக்கிறது.
தமிழக அரசின் நேரடி கடன் 9 லட்சத்து 30 ஆயிரம் கோடி. தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன்பு 4 லட்சத்து 54 ஆயிரம் கோடி. நினைத்து பாருங்கள். 2 மடங்கு அதிகமாக கடன் வாங்கிய தி.மு.க. ஆட்சியில் ஏதாவது முன்னேற்றம் உள்ளதா? கடன் வாங்கி கடனை அடைத்து கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு எல்லாம் நிர்வாகம் தெரியுமா? 2 ஆண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும். கிரானைட், மணல், தாதுமணல், ஆற்று மணல் கொள்ளை என இயற்கை வளங்கள் இந்த ஆட்சியில் நடக்கிறது. இதையெல்லாம் நினைத்து பாருங்கள்.
இந்த பகுதி மா விவசாயிகள் அதிகம் உள்ள பகுதி. ஒரு லட்சம் ஏக்கர் மா சாகுபடி செய்யும் பகுதியாகும். ஆனால் இந்த வருடம் மாம்பழத்தை தரையில் போட்டு சென்றனர். காரணம் மாம்பழத்திற்கு விலை இல்லை. கடந்த அண்டு ஒரு டன் 22 ஆயிரம் வரை போனது. ஆனால் இந்த ஆண்டு 3 ஆயிரம் கூட போகவில்லை. பறிக்க கூடிய கூலி கூட கிடைக்கவில்லை.
ஆனால் முதல் அமைச்சரோ, தினமும் நாடகம் நடிக்கிறார். திட்டங்கள் அறிவிப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்கள், பெற்றோர்கள் உங்களின் பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் தி.மு.க.வை நீங்கள் எல்லோரும் வீட்டிற்கு அனுப்புங்கள்.
தமிழ்நாட்டில் கல்வி கொள்கையை வெளியிட்ட தி.மு.க. தமிழுக்காக என்ன செய்துள்ளார்கள். தமிழ் மொழி பற்றி பேசவும், சமூக நீதி பற்றி பேசவும் எந்த தகுதியும் இல்லை. சமூக நீதிப் பற்றி ஒரே மேடையில் பேச நான் தயார்.. என்னுடன் விவாதிக்க திமுக தயாராக என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நாங்கள் சாதி வாரியாக கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகிறோம். பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் செய்கிறார்கள். நீங்கள் ஏன் செய்ய மறுக்கறீர்கள். கர்நாடகாவில் 2 முறை சாதி வாரியாக கணக்கெடுப்பு நடந்துள்ளது. அனைத்து சமுதாய மக்களும் வருகிற தேர்தலில் தி.மு.க.வை புறக்கணியுங்கள்.
தி.மு.க. ஒரு வேளை ஆட்சிக்கு வந்தால் உங்களின் தலைமுறையே பாதிக்கப்படும். ஒரு கோடியே 30 லட்சம் படித்த இளைஞர்களுக்கு தமிழகத்தில் வேலை இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது என பேசினார்
இதையும் படிங்க: நாடாளுமன்றம் போய் என்னத்த பண்ணீங்க? அன்புமணியை கேள்விகளால் துளைத்த MRK