தருமபுரி மாவட்டம் கடத்தூரில் பாமக நிர்வாகி செந்தில் என்பவர் எழுதிய திரும்பி பார்க்கும் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு, நூலை வெளியிட்டார். இந்த கூட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்க மாநில செயலாளர் முன்னாள் எம்எல்ஏ இல.வேலுச்சாமி கலந்து கொண்டு பேசும் போது, பாட்டாளி மக்கள் கட்சிக்கு என்றெல்லாம் சோதனைகள் வருகின்றதோ, அன்றைக்கெல்லாம் இக்கட்சியை தூக்கி நிறுத்தியது தருமபுரி மாவட்ட பா.ம.க., தான்.
ஆனால் அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் பல நெருக்கடியான சூழ் நிலையில் தருமபுரி மாவட்டம் அன்புமணி ராமதாஸின் பின்னால் ஒற்றுமையாக நிற்கிறோம். சமுதாயத்துக்கும் கொள்கைக்கும், இயக்கத்திற்க்கும் அன்புமணி ராமதாஸ் பின்னால் நிற்கிறோம்.
ஆனால் துரதிஷ்டம் என்னவென்று சொன்னால், இந்த மாவட்டத்தில ஜி.கே.மணி என்ற நபர் இந்த மாவட்டத்திற்கு வருகை தந்து, இந்த இயக்கத்திற்கு யார் யாரெல்லாம் உழைத்தார்களோ தியாகம் செய்தார்களோ அவர்களை ஒழித்துவிட்டார்.
தருமபுரி மாவட்டத்திற்கு சவுமியா கிடைத்தது ஒரு பொக்கிஷம். அவரின் வெற்றியை யாரும் தடுத்து விட முடியாது. ஆனால் ஜி.கே.மணியின் தலைமையில் ஒரு கூட்டம் தான், பா.ம.க.,தோற்கடிக்க திட்டம் தீட்டியது. மு.க.ஸ்டாலினுக்கும், ஜி.கே.மணிக்கும் என்ன தொடர்பு. டாக்டர் ராமதாஸ் தினமும் காலையில் ஒரு அறிக்கை கொடுப்பார். அதற்கெல்லாம் நான் பதில் கூற முடியாது என்று கூறிய மு க ஸ்டாலினை கண்டித்து பா.ம.க ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு ஒரே ஜெ. தான்! தம்பி போட்ட பதிவுக்கு பிரேமலதா விளக்கம்!
பாமகவை திமுகவுக்கு காட்டி கொடுத்திருப்பவர் ஜிகே மணி. தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை ராமதாஸ் தொடங்கினார். அப்போது அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என்று கூறினார். ஆனால் இன்று வரை ஜிகே மணி அதை கடைபிடிக்கவில்லை. 30 ஆண்டு காலமாக கட்சியிலிருந்து பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் வெளியேறுவதற்கு காரணம் ஜிகே மணி தான். பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவுகின்ற அத்தனை குழப்பத்திற்கும் ஜிகே மணி தான் காரணம் .
பலர் கட்சிக்காக உழைத்திருக்கிறார்கள். அவர்களை அழைத்து டாக்டர் ராமதாஸ் என்றைக்காவது ஓய்வறியா உழைப்பாளி என்று கூறியிருக்கிறாரா? இல்லை.
இன்று கோடிக்கனகான ரூபாய் ஜி.கே.மணி எப்படி வந்தது. ஜி.கே.மணி இட ஒதுக்கீடுக்காக என்றாவது ஜெயிலுக்கு போனது உண்டா? போராட்டத்தில் கலந்து கொண்டது உண்டா?
சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்துக்காக என்றாவது சட்டமன்றத்தில் இருந்து புறக்கணிப்பு செய்து வெளியே வந்ததுண்டா? ஜிகே மணி யாரும் பகைத்துக் கொள்ள வேண்டாம் கட்சி பொறுப்பில் இருந்து தூக்கி விடுவார் என ராமதாஸ் அவர்களே கூறியுள்ளார் என பேசினார். இந்த மேடையில் அமர்ந்திருந்த சௌமியா, வேலுச்சாமி பேசுவதை கேட்டுக் கொண்டு தலையாட்டிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காசாவில் நாளைக்கே போர் நிறுத்தம்!! இத மட்டும் பண்ணிருங்க!! நெதன்யாகு ட்விஸ்ட்!!