இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸிடம், எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்துக்கும் போது அதாவது வன்னியர்களுக்கான 10.5% தொடர்பானது வந்து முடிந்து போன விஷயம். அது குறித்து இனி பேச வேண்டாம் அப்படின்ற ஒரு கருத்தை பதிவு பண்ணிருக்காங்க. அத எப்படி பாக்குறீங்க? என்ற கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், அது சரியான கருத்தைதான் சொல்லிருக்காரு. அது முடிஞ்சு போன விஷயத்தை கிளறி கிளறி அது ஒரு பக்கம் ஊதி ஊதி நெருப்பு அது ஒரு பக்கம் பெருசாகிட்டு இருக்காங்க. தேவையில்லாதது.
ஒரு கருவி வந்து கிளியனூர்ல ஒப்படைத்தீங்க, அதுல என்ன முன்னேற்றம் இருக்குது யாரு என தெரியுமா? ஒட்டுக்கேட்கும் கருவியை கிளியனூர் இன்ஸ்பெக்டர் கிட்ட ஒப்படைச்சோம். அது என்ன ஆச்சுன்னு தெரியல. இந்திய அளவில மிக திறமையான சைபர் கிரைம் நம்ம தமிழ்நாட்டில அவங்க நினைச்சா இரண்டே நாள்ல அதை கண்டுபிடிச்சிருக்கலாம். எனக்கு இதுவரை அது பற்றிய தகவல் ஒன்னு அவங்க மூலமா சைபர் கிரைம் அந்த டிபார்ட்மெண்ட் மூலமாகவோ அல்லது காவல் துறை மூலமாகவோ ஒரு பதிலும் எனக்கு கிடைக்கல. அதனால விரைந்து அதை யார் வைத்தார்கள்? எதற்காக வைத்தார்கள்? என்பதை அவர்கள் கண்டுபிடித்து கூற வேண்டும் என கேட்கிறேன்.
சட்டமன்ற தேர்தல்ல மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்குதா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், இல்ல, அதிமுக, திமுக தவிர்த்து மூன்றாவது அணி இல்ல, நாலாவது அணி, அஞ்சாவது அணி, ஆறாவது அணி கூட இருக்கும். ஏன் முணுனோட நிறுத்திக்கிறீங்க? என பதில் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: யார் எந்த யாத்திரை போனாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்புமணியை டாரு டாராக கிழித்த ராமதாஸ்...!
தமிழகத்துக்கு தேர்தல் நெருங்கும் நேரத்துல பிரதமர் மோடி அடிக்கடி தமிழக எப்படி பார்க்குறீங்க என்ற கேள்விக்கு, ஆமா தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவாரு தேர்தல் நெருங்க நெருங்க அடிக்கடி வருவாரு. அது நல்லதுதானே என்றார்.
இதையும் படிங்க: நடைபயணத்திற்கு தடையில்லை - அன்புமணிக்கு கிடைத்த ஹேப்பி நியூஸ்...!