திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக பொதுக்குழு நாளை புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் பொதுக்குழு நடைபெறுவதாக அறிவிக்கபட்டதில் சில விஷ கிருமிகள் பொதுக்குழு
ரத்து செய்யப்படுவதாக செய்யபட்டுள்ளதாக சில விஷ கிருமிகளால் வதந்திதள் பரப்பபட்டு வருகின்றனர். அதனை யாரும் நம்ப வேண்டாம். திட்டமிட்டப்படி பொதுக்குழு நாளை 17 ஆம் தேதி நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அன்புமணி தைலாபுரம் இல்லத்தில் நேற்றைய தினம் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ் , எனது துணைவியார், அன்புமனியின் தாயாரின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்புமணி வாழ்த்து இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், அன்புமணி தன்னிடம் வணக்கம் என கூறினார். நானும் வணக்கம் என்று கூறினேன். அதை தவிர நாங்கள் வேறு எதுவும் பேசவில்லை என தெரிவித்தார்.
மேலும் தனது தாயாருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அன்புமணி புறப்பட்டு சென்றதாகவும், வேறு எந்த பேச்சும் இல்லை என கூறிய அவர், பொதுக்குழு கூட்டத்தில் குறைந்தது 4 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் செயல்தலைவர் பொறுப்பினையே அன்புமணி ஏற்றுக்கொள்ளவில்லை அவர் தான் தலைவர் தான் என கூறி என்ன என்னவோ செய்து வருகிறார், அது பற்றி நான்கூற எதுவும் இல்லை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராமதாஸ் நீதிமன்றத்துக்கு வர மாட்டாராம்! நீதிபதிக்கே கடிதம் எழுதிய விவகாரம்...
அன்புமணி தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கவில்லை எல்லாம் பொய், அன்புமணி எங்கு சென்றாலும் இரு கேமராமேனை உடன் அழைத்து செல்வதாக கூறினார். இருவருக்குமான சமாதானம் ஆகுமா என்ற கேள்விக்கு போக போக தெரியும் நாளை பொதுக்குழுவில் முக்கிய முடிவு வெளியாகும் என் திட்ட வட்டமாக ராமதாஸ் தெரிவித்தார்.
நாகலாந்து கவர்னர் இல.கணேசன் அருமையான நண்பர் உடல்நலக்குறைவால் மறைவுற்றது வருத்தமளிக்கிறது. மிக்க மரியாதையோடு பண்போடு பழகுபவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
தனது தனிச்செயலாளர் ஊடக தொடர்பாளர் சாமி நாதன் மற்றும் தனக்காக பணி செய்பவர்களை மிரட்டி தனக்கு எதுவும் செய்ய கூடாதென சாமிநாதனுக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது. கொலை மிரட்டல் விடுத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க டி ஜி பி அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: பாமக நலன் முக்கியமில்லையா? அன்புமணி, ராமதாஸ் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவு