தமிழக வெற்றிக்கழ தலைவர் விஜய் நாளை நாமக்கல்,கரூரில் மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபடுகிறார். கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள செம்பட்டை, வெங்கமேடு சர்ச் கார்னர் வழியாக வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கரூரில் நாளை விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ள நிலையில், இன்று வரை அனுமதி கொடுக்காமல் காவல்துறை இழுத்தடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. தவெகவினர் பரப்புரை நடத்த கேட்ட இடத்திற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்ததாகவும், இதனால் நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
கரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்ள லைட் ஹவுஸ் கார்டன் பகுதியில் அனுமதி கோரி தவெகவினர் மனு அளித்திருந்தனர். நாளை நாமக்கல் கரூரில் மக்களை சந்திக்கிறார் விஜய். போலீசார் பரிந்துரையை ஏற்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கரூரில் நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்ட இடம் வேலுச்சாமிபுரம். இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: தவெகவிற்கு தொடரும் நெருக்கடி... காலையிலேயே வெளியான ஷாக்கிங் நியூஸ்... விஜய் எடுத்த அதிரடி முடிவு...!
நீண்ட இழுபறிக்கு பிறகு தற்பொழுது எந்த இடத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்ற ஒரு உறுதிமொழியை எழுத்து மூலமாக தவெகவினர் கொடுத்ததன் அடிப்படையில மாவட்ட காவல்துறை அதற்கு அனுமதி கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கரூர் பகுதியில் இருக்கக்கூடிய லைட் ஹவுஸ் பகுதியில் தான் விஜய் பரப்புரை மேற்கொள்வதற்கான அனுமதியானது தவெக சார்பில் கோரப்பட்டிருந்தது. ஆனால் அந்த இடம் மிகவும் குறுகலான பகுதி, விஜயை பார்க்க வரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமான அளவில் இருக்கும் என்பதனாலும், அந்த குறுகலான இடங்களுக்குள்ளாக விஜயனுடைய பேருந்து வருவதற்கோ அல்லது அவர் வாகனத்தில் இருந்து பரப்புரை செய்வதற்கோ இடவசதி போதாது என்பதாலும் காவல்துறை அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் வேலுச்சாமிபுரத்தை பொறுத்தவரையிலும் அருகிலேயே 10 ஏக்கர் அளவுல பார்க்கிங் செய்வதற்கான வசதிகள் இருப்பதாகவும், அதேபோன்று அங்கிருந்து ஈரோடு செல்வதற்கான புறவழிச்சாலை இருக்கக்கூடிய பகுதி என்பதனாலும் அப்பகுதியை காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளனர். அந்த பரிந்துரையை ஏற்று தவெகவினர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வழக்கமான கட்டுப்பாடுகளுடன் விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து வரக்கூடிய வாகன எண்ணிக்கை ஐந்தாக இருக்க வேண்டும். வரக்கூடியவர்களில் ஏற்படுத்தக்கூடிய பொது சொத்து சேதத்திற்கு தவெகவினர் பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் தற்பொழுது விஜய் கரூரில் நாளைய தினம் பரப்புரை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: வார்த்தையை அளந்து பேசுங்க சாட்டை... தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்த தவெக நிர்வாகிகள்...!