சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படாததைக் கண்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் இந்த செயல் தமிழக சட்டப்பேரவையின் மரபு மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்துவது என திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டித்தன. இதனிடையே, தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும் , அவரைக் காப்பாற்றும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணியையும் கண்டித்து இன்று காலை மாவட்ட தலை நகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தி.மு.க எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாஜக அல்லாத மாநிலங்களில் தனி ராஜாங்கம் நடத்த ஆளுநர்கள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டிய திமுக, மாநில அரசை மதிக்காத ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது. மாநில உரிமையை சிதைத்து, சுயாட்சியை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவதாவும், இதே நிலை நீடித்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் இருந்து ஓட, ஓட விரட்டப்படுவார் என்றும் திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ரொம்ப ஓவரா போறீங்க ..பிரிவினைவாதத்தை தூண்டுவது யார் ? திமுகவை வறுத்தெடுத்த தமிழிசை..!

இதற்கு முன்னதாக அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். ஆனால் திமுக நடத்திய இந்த போராட்டத்தை காவல்துறை அமைதியாக வெடிக்கை பார்ப்பதாக பாமக தலைவர் அன்புமணி கடுமையாக சாடினார். அதேபோல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் திமுக போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திமுகவினர் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, போராட்டங்களில் பங்கேற்றவர்களை வீடியோ காட்சிகள் மூலமாக அடையாளம் கண்டு வழக்குப்பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: லீவ் லெட்டர் எழுதும் ஆளுநர்..ஓடஓட விரட்டப்படுவீர்கள்..CM பொறுமைக்கு எல்லையுண்டு ..கர்ஜித்த கனிமொழி எம் .பி