கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். முன்னதாக பொள்ளாச்சியில் உள்ள தனியார் விடுதியில் விவசாயிகள், நெசவாளர்கள், ஆகியோருடன் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கையில் இதனை அறிவிக்க வேண்டும் என வேட்டைகாரன்புதூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற விவசாயி பேசினார்.
அப்போது கடந்த ஆட்சியில் கள் இறக்க அனுமதி கொடுத்திருந்தால் நாங்கள் நன்றாக இருந்திருப்போம் என பேசினார். உடனடியாக குறுக்கிட்ட எஸ்.பி.வேலுமணி , பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என கூறியபோது, எடப்பாடி பழனிச்சாமி விவசாயிடம் கடுமையாக நடந்து கொண்டார். இது தமிழ்நாடு தனிப்பட்ட முறையில் யாருக்கும் பண்ண முடியாது. 8 கோடி பேர் உள்ளனர். நீங்க போங்க, சொன்ன புரிஞ்சுக்க மாட்டிங்க நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றார். உங்களது கருத்தை சொல்லுங்க, அதோடு நிறுத்தி கொள்ளுங்கள் என சாடினார். இதையடுத்து அந்த விவசாயி கூட்டத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார்.
இது குறித்து பேசிய விவசாயி பாலசுப்பிரமணியன் கூறும் போது : வேட்டைகாரன்புதூரில் விவசாயம் செய்து வருகிறேன். ஙஅதிமுக சார்பில் விவசாயிகள் குறை கேட்கும் ஆலோசனை கூட்டத்திற்கு வந்தேன். தென்னையில் இருந்து கல் இறக்க அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதிமுக தேர்தல் அறிக்கையில் இதனை அறிவிக்க வேண்டும் கோரி மனு வழங்க வந்தேன். இந்த கோரிக்கை வைத்து பேசிய போது பேச கூடாது என்று வெளியே அனுப்பினர். இ
இதையும் படிங்க: இபிஎஸ் பொதுச்செயலாளரா? சில விஷயங்கள் இருக்கு! ஓபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்...
வர்கள் ஆட்சியில் 4 ஆண்டுகள் ஏதும் செய்யவில்லை, நீரா பானம் விற்க மட்டும் அனுமதி கொடுத்து விட்டு பேசுகிறார்கள். என் மீது 40 வழக்குகள் போடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வேண்டாம் கேரளா செல்கிறேன், எனது நிலத்தை விற்க முடியவில்லலை. அண்ணாமலை குரல் கொடுத்தார், அவரையும் எடப்பாடி தலையில் குட்டி அமர வைத்தார். இவரும் வாழமாட்டார், விவசாயிகளையும் வாழவிடமாட்டார் என்றார்.
பொள்ளாச்சியில் விவசாயி ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சண்டை செய்த எடப்பாடி பழனிசாமி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன்😡
விவசாயிகளுக்கு பதில் சொல்ல வக்கில்லை.. அப்புறம் எதுக்கு அவர்களுடன் கலந்துரையாடல் @EPSTamilNadu?😂😂😂
pic.twitter.com/tAkPy4SH6Z
— Surya Born To Win (@Surya_BornToWin) September 10, 2025
இதையும் படிங்க: எந்த துணிச்சலில் செங்கோட்டையனை சந்தித்தார்கள்? அமித்ஷாவுக்கு திருமா. கேள்வி