தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல்23ஆம் தேதி 2026 காண சட்டமன்ற தேர்தலும், மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஆளும் கட்சியான திமுக, எதிர்கட்சியான அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் பாமக ராமதாஸ் வி கே சசிகலா உட்பட 5 முனைப்போட்டியாக இருந்து வருகிறது. பிரதான கட்சிகளான திமுக அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் தனித்து நின்று இந்த தேர்தலை சந்திக்க உள்ளது.
திமுகவில் 24 கட்சிகள் கூட்டணியில் இருக்கும் நிலையில் தற்போது முக்கிய கட்சிகளை தவிர்த்து இதர கட்சிகளிடம் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி முடிவு பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி அவருக்கு பதிலாக திருக்கோவிலூர் தொகுதியில் அவரது மகன் பொன்.கௌதம சிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமுனுவை பொன்.கௌதம சிகாமணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கி இருந்தார். ஆனால் பொன்முடி வழங்கவில்லை.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் நடக்கும் அநியாயம்... GPAY நம்பர் வாங்கும் திமுக நிர்வாகிகள்..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!!
இந்த நிலையில் திமுக தலைமை இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்முடியின் சொந்த ஊரான தி.எடையார் பகுதியில் பல்வேறு இடங்களில் திமுக வெற்றி வேட்பாளர் பொன் கௌதம சிகாமணி என சுவர் விளம்பரம் எழுதி அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறும் வகையில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. தலைமை அறிவிப்பதற்கு முன்னதாகவே பொன்.கௌதம சிகாமணி தான் வேட்பாளர் என சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.
பொன் கெளதமசிகாமணி 2019-2024 வரை கள்ளக்குறிச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) பணியாற்றியவர். ஆனால் அதன் பின்னர் திமுக தலைமை இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் பொன்முடி அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பாவை போல் தலைமைக்காக காத்திருக்காமல், தானே தன்னை திமுக வேட்பாளராக பிரகடனப்படுத்தும் விதமாக பொன் கெளதம சிகாமணி செய்துள்ள காரியம் தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தொகுதி பங்கீடு இழுப்பறி... அடம் பிடிக்கும் CPM... சமாதான பேச்சுவார்த்தைக்கு களமிறங்கிய வைகோ..!!