தூத்துக்குடி கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் வருகை தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஏறக்குறைய 8,9 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வரஇருக்கிறது ஏற்கனவே செயற்குழு பொது குழு பேசியது போல் ஜனவரி மாதம் கடலூரில் 9-ம் தேதி மாபெரும் மாநாடு வைத்திருக்கிறோம் அந்த மாநாட்டிற்குள் எல்லாம் முடிவு செய்து அந்த மாநாடு மிகப்பெரிய அறிவிப்பாக இருக்கும் என கூறிக் கொள்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

இ டி ரைடு நடப்பது ஒன்றும் புதிதல்ல எப்போதும் நடக்க கூடியதுதான் தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் மாற்று கருத்தில்லை வரிப்பணத்தை ஊழல் லஞ்சமாக பெற்றால் கண்டிப்பாக அனுபவித்து தான் ஆக வேண்டும் இ டி வருகிறது ஆனால் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை கேப்டன் சொன்னது போல் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம்.
இதையும் படிங்க: தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன்.. தமிழகத்தில் பிரிக்க முடியாதது வாரிசு அரசியலும் இளைஞரணி பதவியும்!
ஒரு தனிநபர் இ டி ரெய்டு டாஸ்மாக்கில் தலையிடக்கூடாது என்பது தனிநபர் விஷயத்தில் அரசுக்கு உள்ளே கொண்டு செல்லக்கூடாது என உச்ச நீதிமன்றம் கோரி இருக்கிறது விசாகன் ராஜா தான் ஆயிரம் கோடி ஊழல் என்பது ஒரு தனிநபர் கொண்டு வருகிறார்கள் அதனால் நம் பொறுமையாக தான் பார்க்க வேண்டும் அவசரப்படக்கூடாது அது தனி நபரை சார்ந்தது அல்லது டாஸ்மாக் டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்ததா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அப்போது அவர் கூறுகையில், கூட்டணிக் கட்சிகளைப் பற்றி கருத்து தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியதற்கு பதில் அளித்த பிரமலதா விஜயகாந்த் ஒரு கூட்டணி என்ற அமைந்த பிறகு அதற்கு உள்ளே சலசலப்பு வந்தால் அந்த கூட்டணி பிரிவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது அதை கட்டுப்படுத்த தனிப்பட்ட கருத்துக்களை எதிர் கருத்துக்களை சொல்ல வேண்டாம் பொறுமையாக இருந்து இந்த கூட்டணி வலுப்படுத்த வேண்டும் அடுத்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரு கூட்டணி அமைத்த பிறகு அந்த நிலைப்பாடு தான் இருப்பார்கள் அந்த நிலைப்பாடு நயினார் நாகேந்திரன் கூறி இருக்கிறார் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

கூட்டணி தொடர்பான முடிவுகள் ஜனவரி ஒன்பதாம் தேதி அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். அப்பாவி மக்களை குருவியை சுடுவது போல் சுட்டுக் கொன்று விட்டார்கள் இது மிகப்பெரிய ஒரு தவறு இது வந்து யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் ஆனால் ஏன் இவ்வளவு காலதாமதம் என தெரியவில்லை பொள்ளாச்சியில் பாருங்கள் பாலியல் வன்கொடுமைக்கு நீதிமன்றம் சரியான தீர்ப்பு கொடுத்திருக்கிறது அதை போல் இன்று இங்கு நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டுக்கு நிச்சயமாக நீதி அரசர்கள் உடனடியாக ஒரு நல்ல தீர்ப்பை மக்களுக்கான தீர்ப்பை தர வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்வதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
இதையும் படிங்க: ஹார்வார்ட் பல்கலை.க்கு அடி மேல் அடி.. அதிபர் டிரம்ப் விதித்த அடுத்த தடை..!