புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ 7ம் வீதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருக்கு கூறுகையில்: தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ்குமார் பல மாநிலங்களில் வாக்கு திருட்டு சம்பந்தமாக புகார் அளித்தும் அவர் பாஜக உடைய கை பாவையாக செயல்பட்டு வருகிறார். பீகாரில் 65 லட்சம் வாக்களர்கள் நீக்கப்பட்டு மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை பாஜக செய்தது. தேர்தல் ஆணையர் ராஜேஷ்குமார் தேர்தல் துறையை பாஜகவின் அங்கமாக மாற்றி உள்ளார்.
தேர்தல் வரக்கூடிய நேரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை திட்டமிட்டு செய்கிறது. அதற்கு காரணம் அவர்கள் யார் யார் மாற்று கட்சிக்கு வாக்களிக்கிறார்களோ பாஜகவுக்கு யார் வாக்களிக்கவில்லையோ அவர்களை நீக்கிவிட்டு பாஜகவுக்கு ஆதரவாக இருப்பவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான வேலையை ராஜேஷ்குமார் பிரதமர் மோடியோடும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சேர்ந்து செய்து வருகிறார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகிறது.ஐந்து மாநிலங்களில் தேர்தல் வரக்கூடிய சமயத்தில் எஸ்ஏஆர் பணியை ஏன் அவசர அவசரமாக செய்ய வேண்டும். இந்த நாட்டு மக்களுக்கு அம்பேத்கர் உருவாக்கப்பட்ட இந்திய அமைப்பு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட வாக்குரிமையை பறிப்பதாகும்.
இதையும் படிங்க: S.I.R. பணிகளில் குளறுபடி... இப்படியா பண்ணுவீங்க? ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வாக்காளர்கள்...!
ஒருவருக்கு உருவாக்கு தான் உண்டு. தமிழ்நாட்டில் புதுச்சேரியில் கர்நாடகாவில் கேரளாவில் பீகாரில் மேற்கு வங்காளத்தில் ஒரிசாவில் இருந்து வந்து பணிபுரிகிறார்கள் அவர்களது பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. அவர்களுக்கு அந்த மாநிலத்திலும் வாக்கு இருக்கிறது இந்த மாநிலத்திலும் வாக்கு இருக்கிறது.அவர்கள் அந்த மாநிலத்திலும் வாக்களித்துவிட்டு இந்த மாநிலத்திலும் வாக்களிக்க உள்ளனர்.
இதற்கு எந்தவித பதிலும் தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை தேர்தல் ஆணையம் மோடியின் கை பாவையாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை தமிழ்நாட்டில் கொடுத்து வருகிறார். அதற்கு முக்கிய காரணம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
இந்தியா கூட்டணியை குலைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு பாஜக தலைமையில் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் அதிமுக சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை குளைப்பதற்கும் தமிழ்நாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். அதற்கு மேல் ஆளுநர் ரவி முன் நின்று செய்து வருகிறார். மாநிலத்தின் ஆளுநர் மாநில அரசையே விமர்சிக்கும் நிலையை தமிழ்நாட்டில் பார்க்கிறோம். அதேபோல் புதுச்சேரியிலும் கிரண்பேடி இதே போல் செய்தார் அந்த நிலைமை தற்போது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோகா வெற்றி பெறும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பாண்டிச்சேரியில் அதேபோல் ஒரு அரசு இருக்கிறது. என் ஆர் பாஜக கூட்டணி ஆட்சி. டபுள் இன்ஜின் சர்க்கார் அமைந்தால் புதுச்சேரியில் பாலாறும் தேனாறும் போடும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியான புதுச்சேரியை பெஸ்ட் மாநிலமாக மாற்றுவதாக தெரிவித்தார்.
கல்வித்துறையில் பத்தாயிரம் மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை வேலைக்கு செல்கிறார்கள். இடைநிறுத்தம் இருக்கிறது இதுதான் கல்வியில் வளர்ச்சியா?, வியாபாரத்தில் வளர்ச்சி என்கிறார்கள் ஜிஎஸ்டியை போட்டு வியாபாரத்தை புதுச்சேரியில் கேள்விக்குறியாக்கிவிட்டனர். ஆன்மீகம் சுற்றுலாவையும் மேம்படுத்துவதாக தெரிவித்தனர். தெருவுக்கு ரெஸ்டோபாரை திறந்து வைத்து குடிகார மாநிலமாக புதுச்சேரியை தற்போதைய முதலமைச்சரும் பாஜகவும் மாற்றிவிட்டது.
இரட்டை இஞ்சி ஆட்சி அப்படியே நிற்கிறது. மாநிலத்தினுடைய வளர்ச்சி குறைந்துவிட்டது. வேலைவாய்ப்பில்லை வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அரசின் நிறுவனங்களுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை ரேஷன் அரிசி இதுவரை நான்கு மாதமாக போடவில்லை எந்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
புதுச்சேரியில் நடக்கும் ஊழல் உள்ளிட்ட அனைத்தையும் மூடி மறைக்கின்ற வேலையை மோடியும் அமித்சாவும் பார்க்கிறார்கள். 2026-ல் என் ஆர் பாஜக ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமையும்.
5000 பேருக்கு வேலை வாய்ப்பு என்பது அப்பட்டமான பொய். 2647 பேருக்கு மட்டும்தான் வேலை கொடுத்துள்ளனர். அதுவும் காவல்துறையில் மட்டும் 1500 பேர் மீதி உள்ள 200 பேர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள் ஆசா பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட்டவர்களை தவிர புதுச்சேரியில் 15000 இடங்கள் காலியாக உள்ளது. இதுவரை நாலரை வருடத்தில் என் ஆர் பாஜக கூட்டணி ஆட்சியில் 2647 பேருக்கு மட்டும்தான் வேலை கொடுத்துள்ளனர். இது அரசின் சான்று. 5000 பேருக்கு வேலை கொடுத்ததாக பொய்யான தகவலை கூறி வருகிறார்.
நான் புதுச்சேரி முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது ஆனால் தற்போது நடைபெறும் இந்த ஆட்சியில் ஒரு திட்டம் கூட நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சி மோடி சொன்னது உண்மைக்கு புறம்பானது ரங்கசாமி செயல் படாத முதலமைச்சர் டாம்மி முதலமைச்சர்.
பாஜக முன்னாள் தலைவராக இருந்த சாமிநாதன் தற்போது தவெகவிற்கு செல்கிறார். அவர் பாஜக தலைவராக இருந்த போது தலைவரும் அவர் தான் அக்கட்சியின் ஒரே ஒரு தொண்டரும் அவராகத்தான் இருந்தார். அவரை பாஜக கலட்டி விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியின் ஓடுகாளிகள் பாஜகவை ஆக்கிரமித்துள்ளனர் அவர்களும் எப்ப ஓடுவார்கள் என்று தெரியவில்லை. சாமிநாதன் பொருத்தவரை அவர் தவெகவுக்கு சென்றுள்ளார் வருங்காலத்தில் பார்ப்போம்.
பீகாரில் 7 கோடி 55 லட்சம் வாக்குகள் தான் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அப்புறம் எப்படி ஏழு கோடி 75 லட்சமாக மாறும் 20 லட்சம் வாக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க: விவசாயிகள் கண்ணீருக்கு திமுக அரசே பொறுப்பு... இதென்ன முதல்வரே? விளாசிய நயினார்...!