சேலத்தில் புகழேந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, பாஜக அண்ணாமலை பேசியதை நான் பல இடங்களில் புகழ்ந்து பேசி உள்ளேன். பாஜகவிற்கு தமிழகத்தில் மதிப்பு இருக்கிறதோ? இல்லையோ, ஆனால் அண்ணாமலைக்கு மரியாதை இருந்தது எனக்கூறி , எடப்பாடி பழனிச்சாமி குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்த முந்தைய வீடியோ காட்சிகளை காண்பித்து பேசினார்.
அதில் பேசிய அண்ணாமலை, பாஜக தன்மானத்துடன் இருப்பதாகவும், யாருக்கும் அடிபணிந்து செல்லமாட்டோம் என்றும் வரும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிருந்தால் நான்காவது இடத்திற்கு தான் அதிமுக செல்லும் என்றும் பேசினார். ஆனால் நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்று கூறுகிறார்.
எடப்பாடி பழனிச்சாமியை தற்குறி என்று பேசிவிட்டு, தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்குவேன் என்று பேசுவது தவறானது. மக்கள் மத்தியில் அண்ணாமலைக்கு நல்ல மரியாதை இருந்த நிலையில், அதை போட்டு உடைத்துவிட்டார். தனது பேரை அண்ணாமலை கெடுத்துக்கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லியதால் தான், அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை அண்ணாமலை புகழ்ந்து பேசினாலும், மீண்டும் அண்ணாமலை தலைவராக, எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் விடமாட்டார்.
இதையும் படிங்க: “போட்டாரே ஒரு போடு”... அமித் ஷாவையே மிரண்டுபோக வைத்த அண்ணாமலை... திடீர் மனமாற்றத்திற்கு காரணம் இதுவா?
அப்படியிருக்க ஏன் அண்ணாமலை தன்னை மாற்றிக்கொண்டார். வடக்கில் இருந்து ஏராளமான தலைவர்கள் தமிழகத்திற்கு வந்தாலும் பாஜக, ஒரு போதும் ஆட்சிக்கு வராது என்றார். தொடர்ந்து விஜய் மாநாடு குறித்து பேசிய புகழேந்தி, பாஜக பின்னால் விஜய் செல்லவில்லை, கொள்கை ரீதியான எதிரி பாஜக என்று விஜய் கூறியுள்ளார். ஆனால் முதல்வர் குறித்து விஜய் பேசியது தவறு என்றார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில், கூட்டப்பட்ட கூட்டம், எழுச்சிக்காக வந்த மக்கள் கூட்டம்; குறைத்து விஜயை மதிப்பிட முடியாது. அண்ணா, பெரியார், எம்ஜிஆர் போன்றவர்கள் பேனர்களை விஜய் மாநாட்டில் பார்த்தோம், ஆனால் அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் புகைப்படத்தை எடப்பாடி பழனிச்சாமி தற்போது காண்பிப்பதில்லை. தன்னுடைய புகைப்படத்தை மட்டுமே பெரிதாக போட்டு வருகிறார். எனவே, எடப்பாடி பழனிச்சாமி அணி விஜய் கூறியது போல, இந்த தேர்தலில் நான்காக இடத்திற்கு செல்லும்.
மூன்றாவது இடத்திற்கான சீமானுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் தான் போட்டி. அதிலும் சீமான் தான் மூன்றாவது இடத்திற்கு வருவார், அவருக்கு அடுத்து தான் அதிமுக வரும், மூன்றாவது இடத்திற்கு கூட வர மாட்டார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தவர் சசிகலாவும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் வீட்டிலேயே உட்கார்ந்து இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது, வெளியில் வந்து மக்களை சந்தித்தாள் தான் அதிமுகவை கைப்பற்ற முடியும் என்றார். வெளியே வராமல் எவ்வாறு அரசியல் பேச முடியும் என்றும் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை ஏமாற்றி வாங்கியதை அறிந்த உயர்நீதிமன்றம் தற்போது அந்த தடையை நீக்கி உள்ளது. சுந்தரமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ளார் என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: திமுக-காரங்க சம்பாதிக்கதான் சமூக நலத் துறையும் பள்ளிக்கல்வித்துறையும்! அண்ணாமலை ஆவேசம்