தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அருள் எம் எல் ஏ தாக்கப்பட்டதற்கு தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, அன்புமணி மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் பேசி அவர், புதுவிதமான அரசியல் கலாச்சாரத்தை அன்புமணி செய்து வருகின்றார். நல்ல கொள்கைகளை கற்பித்து செயல்படுத்தி வருகின்றேன்.
ஆனால் இவர்கள் மோசமான கலாச்சாரத்தை செய்து வருகின்றார் அன்புமணி என்று குற்றம் சாட்டினார்.
டீசண்ட் டெவலப்பண்ட் பாலிடிக்ஸ் என்று முன்னர் அன்புமணி பேசும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது கத்தி, கபடா என்று சண்டைப்போட்டு சிறைக்கு செல்லுகின்றனர். இதைத்தான் டீசண்ட் டெவலப்மெண்ட் என்று அன்புமணி பேசினாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணி... மருமகள் செளமியா மீதும் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு...!
இந்த சேலம் வன்முறை சம்பவத்தில் அருள் எம்.எல்.ஏ துக்கம் விசாரிக்க சென்றார். நல்ல வேலை அவர் தப்பி பிழைத்தார். அவர்களோடு ஆயுதங்களோடு அடித்து கார் நொறுக்கி 18 பேர் மருத்துவமனையில் உள்ளனர். இதுவா டீசண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ், இதுவா நாட்டை வளம் பெருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
என்னுடைய பாசமுள்ள கட்சிகாரர்கள் மீது சுண்டு விரல் பட்டாலும் அதற்கு காரணம் அன்புமணி யும், அவரின் மனைவி செளமியா அன்புமணி யும் தான் என குற்றம் சாட்டினார்.ஏனென்றால் என் கட்சியினர் என் உயிருக்கு மேலானவர்கள் என்று உருக்கமாக தெரிவித்தார்.
அன்புமணி தலைமையிலான கும்பல் திருந்த வேண்டும் என செய்தியாக சொல்கிறேன் என்றார். உனக்கு ஒருவர் மீது கோபம் என்றால் நேரா போய் திட்டிட்டு வாங்க, ஆனால் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கேவலமாக பேசும் கலாச்சாரத்தை உருவாக்கி வருகின்றனர்.பாமகவை சேர்ந்தவர்கள் இதனை பார்ப்பதற்கு தவிருங்கள் என கட்சியினர்க்கு வேண்டுக்கோள் விடுத்தார்.
மீண்டும் சொல்கிறேன், என் கட்சி பேரையும், என் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார். நீ தனியாக கட்சி 21 பேரை வைத்துக்கொண்டு கட்சி ஆரம்பிச்சிக்க, பேர் வைக்க வேண்டுமானல் நானே சொல்றேன் பொருத்தமான பெயராக என்றவர். உனக்கும் பாமக வுக்கும், என்னோடும் எந்த சம்பந்தம் இல்லை என்று பகிரங்கமாக சொல்கிறேன்.
தமிழகம் அமைதி பூங்காவ திகழனும் என்று என்னுடைய நண்பர் மறைந்த கலைஞர் அடிக்கடி சொல்வர். இப்படி கத்தி, கபடா வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுவது அமைதி பூங்காவாக இருக்காது.
பாமகவினர் எந்த நேரத்திலும் எதிர்வினை ஆற்றக்கூடாது. அவன் கத்தி எடுத்தால் பதிலுக்கு நீ எடுக்கக்கூடாது, சுமூகமாக பேசுவதை கையாள வேண்டும் என கட்சியினரை கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி அடிக்கடி சொல்வார், நான் சீனியர் அரசியல்வாதி என்று சொல்றேன்.
நான் உனக்கு எல்லா பதவிகளையும் கொடுத்தேன், எல்லாம் வீணா போச்சி. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்றார்.
டிசம்பர் 30 ல், சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசலில் பாமக பொதுக்குழு நடைப்பெற உள்ளது. அந்த பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.
அருள் எம்.எல்.ஏ தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்து இருக்காங்க எடுத்துக்கொண்டு வருகின்றாங்க என்றார் ராமதாஸ்.
இதையும் படிங்க: வீரியமெடுக்கும் டெங்கு பரவல்…! மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்… ராமதாஸ் வலியுறுத்தல்…!