ஆள் பேர அரசியல் சட்டப்படி, நியாயப்படி, ஆரோக்கியமான ஜனநாயக அரசியலாக ஆகாது என்பதை அறிந்து கொண்ட தேர்தல் ஆணையம் தமிழகத்தில் இடைத்தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது இது விஜய்க்கு பேரிடியாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அரசியலில் ஆத்திச்சூடி படித்துக்கொண்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உங்கள் விஜய், உங்கள் விஜய் என்று பக்காவா ஒரு மெட்டு போட்டு, பாட்டு போட்டு தமிழ்நாட்டு முதலமைச்சர் அரியணையில் அமர்த்திட்ட நம்ம முதல்வர் விஜய் நடித்து வெளிவந்த படமும் ,இப்போது தமிழ்நாட்டுக்கு நடத்துகின்ற பாடமும் வேறுபட்ட இரட்டை நிலைப்பாடு என்பதை இப்போது மெல்ல மெல்ல நம் நாட்டு மக்களுக்கு புரிந்து வருகிறது.
முதல்வர் அரியணையில் அமர்வதற்கு முன்பு, முதல்வர் அரியணையில் அமர்ந்த பின்பு, எப்படி கிமு ,கிபி என்று பிரிக்கிறோமோ அதுபோல அரியணையில் அமர்வதற்கு முன்பு, அரியணையில் அமர்ந்த பின்பு என்று நடக்கிறது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது?... சல்லடை போட்டு சலித்தெடுக்கும் காவல்துறை... வெளியான பகீர் பின்னணி...!
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடியில் அப்போது அறிவிப்பு என்ன இருந்தது ?. இப்போது அரசாணை என்ன வெளியிட்டு இருக்கிறது நாடெங்கும் நடைபெற்று வருகிற விவசாயிகள் போராட்டமே இதற்கு சாட்சி. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு ,போதை பொருள் நடமாட்டம் குறித்து அப்போது என்ன பேசப்பட்டது இப்போது என்ன அரசாணை வெளிவந்திருக்கிறது. கன்னியாகுமரியில் அணு கனிமம் சுரங்கம் குறித்து அப்போது போட்ட தீர்மானம் என்ன? இப்போது அரசாணை வெளியிட்டது என்ன ?
துப்புரவு பணியாளர்கள் தனியார் மயமாக்குவது குறித்து அப்போது ஆதரவு தெரிவித்தது என்ன?, இப்போது அரசு வெளியிட்டது என்ன ?, மக்கள் போராட்டத்திற்கு பிறகு வாபஸ் வாங்கியது என்ன ?, அரசு பணி நியமனங்களில் அப்போது பேசியது என்ன? இப்போது நடப்பது என்ன?, தனது ஆஸ்தான ஜோதிடர், தனது ஆஸ்தான படம் தயாரிப்பாளர் ,தனது ஆஸ்தான ஆலோசகர், தனது ஆசாத் நண்பர் என்று அத்தனை பேர்களுக்கும் அரசு பதவிகளை அள்ளி அள்ளி வழங்கி வருகிற பணி நியமன குளறுபடிகளை குறித்து அப்போது பேசியது என்ன? இப்போது நடப்பது என்ன ?மன்னராட்சியா, மக்களாட்சியா என்று கேட்டது என்ன ? இப்போது நடப்பது என்ன?.

மொத்தத்திலே தனது ஆட்சியின் பெரும்பான்மை நிரூபிக்க அடுத்த கட்சி எம்எல்ஏக்களை அதிரடியாக தூக்குவதும் ,அடுத்த அரசியல் கட்சிகளை அன்போடு தூக்குவதும் தமிழகம் இதுவரை கண்டிராத குதிரை பேரம் ஆகும். கிராம சந்தையில் ஆடுகள் பேரம், மாடுகள் பேரம் என்பதை நாம் பார்த்திருப்போம் அதில் மாடு,ஆடு வைத்து இருப்பவர்களிடம் அதை வாங்கும் போது கையிலே துண்டை போட்டு அவர்கள் பேரம் பேசியதை நாம் காலம் நலமாக பார்த்து வருகிறோம்
ஆனால் இப்போதுதான் தமிழகத்தில் அரியணையை காப்பாற்ற விஜய் நடத்துகிற ஆள் பேரம் நமக்கு அதிர்ச்சியை தருகிறது. சுருக்கமாக சொன்னால் தமிழ்நாட்டு மக்களின் அடிவயிறு பற்றி எரிகிறது. ஆள் பிடிக்கிற அரசியல் சட்டப்படி, நியாயபடி, தர்மபடி ஆரோக்கியமான ஜனநாயக அரசியல் ஆகாது என்பதை யார்தான் முதல்வர் விஜய்க்கு புரிய வைப்பது.
நேத்து ஆள்சேர்ப்பு விழாவிலே ஆடிய அந்த கூத்து, அதில் காற்று வாங்கியது எப்படி, தொண்டர்கள் புறக்கணித்தது எப்படி, பிரியாணி போட்டது எப்படி, அதிகாரம் இருக்கும் இடத்திலே தான் நாங்கள் என்பதை இதுபோன்று அவர்கள் காட்டியிருக்கிறார் எது எப்படியோ ஒன்று மட்டும் நமக்கு இன்றைக்கு நமக்கு ஆறுதலான தலைப்பு செய்தியாக இருப்பது தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாட்டின் நடைபெற்று வருகிற ஆள் பேர அரசியல், குதிரை பேர அரசியல், சட்டப்படி நியாயப்படி தர்மபடி ஆரோக்கியமான ஜனநாயக அரசியலாக இல்லை என்பதாலோ என்னவோ பிஹர் ,மத்திய பிரதேஷ், குஜராத்தில் காலியாக உள்ள மூன்று தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு செய்துவிட்டு தமிழ்நாட்டுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடவில்லை.
முதல்வர் விஜய் இலக்கை எட்டுவதற்காக மொத்தம் 12 எம்எல்ஏக்களில் காலி செய்ய வைத்து அதிரடி அரசியல் அரங்கேற்றம் செய்வதற்கு தயாராக இருந்தபோது பேரிடியாக தற்போது தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது என்கிற ஆறுதல் செய்தி தான் தமிழ்நாட்டுக்கு இப்போது கிடைத்திருக்கின்றது மகிழ்ச்சியாக செய்தி
இந்த நாட்டின் மன்னர்களான இளைய சமுதாயமே இந்த கூத்துகளை எல்லாம் நீங்கள் பெறுமையோடுயோடு பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் முதலமைச்சர் அரியணையில் அமர்வதற்கு முன்னால் தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கு ஏன் உங்களுக்கும் என்ன செய்தார் விஜய் எதுவும் செய்யவில்லை.
சரி இப்போது முதல்வர் அரியணையில் அமர்ந்துவிட்ட பிறகாவது இந்த நாட்டு மக்களுக்கும், உங்களுக்கும் 50 நாட்களில் என்னதான் செய்தார் எதுவும் தெரியவில்லை .
இனி வரும் காலங்களிலும் நாட்டிற்கு என்னதான் செய்துவிடப் போகிறார் அதுவும் நமக்கு புரியவில்லை ஏனென்றால் நம்ம முதல்வர் விஜய் அவர்களுடைய கவலையும் கவனமும் த.வெ.க ஆட்சியின் பெரும்பான்மையை உறுதி செய்வதிலே தான் சுற்றி சுற்றி வருகிறது தவிர வேறு எதையும் இந்த 50 நாட்களில் நாம் காண முடியவில்லை என கூறினார்.
இதையும் படிங்க: தவெகவில் மீண்டும் அதிரடி... 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!