வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

அண்ணா அறிவாலயம் முற்றுகை… தூய்மை பணியாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு… போலீஸ் நடவடிக்கை…!

அண்ணா அறிவாலயம் முன்பு போராடிய தூய்மை பணியாளர்கள் மீது வழக்கு பாய்ந்தது.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன. இருப்பினும் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தூய்மை பணிகளை தனியாரிடம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் கலைஞர் கருணாநிதி நினைவிடம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அண்ணா அறிவாலயம் வந்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதையும் படிங்க: திருட்டு ஓட்டு வாங்குனீங்களே… வாழ்வதா? சாவதா?… கலைஞர் நினைவிடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்…!

தூய்மை பணியாளர்கள் டயருக்கு அடியில் படுத்துக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடினர். அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய பணியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தின் அருகே போராடிய தூய்மை பணியாளர்கள் 349 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணி நிரந்தரம் மற்றும் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பஸ்ல இருந்து குதிச்சிடுவோம்… குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள்… பரபரப்பு…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी