முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழா தேவர் ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கர் தேவர் சிலைக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி, இன்று 118 ஆவது தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழாவை ஒட்டி அவரது திருவருவ சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு ஓ. பன்னீர் செல்வமும் செங்கோட்டையனும் சேர்ந்து ஒரே காரில் பயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்று ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் சேர்ந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இபிஎஸ்ஐ வீழ்த்துவதற்கு ஒருங்கிணைத்துள்ளோம் என்றும் தொடர்ந்து ஒருங்கிணைந்து பயணிப்போம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேவர் நினைவிடத்தில் ஒன்று கூடி உள்ளோம் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவதற்காக சசிகலா பசும்பொன்னுக்கு வருகை தந்தார். 
இதையும் படிங்க: ஓபிஎஸ் ஒரு துரோகி... அவங்க மூணு பேரும் திமுகவின் B டீம்... இபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்...!
அப்போது ஓ பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் சசிகலாவை சந்தித்து பேசினர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களுடன் பிரிந்து சென்றவர்களுடன் செங்கோட்டையன் இது போன்ற சந்திப்பு நிகழ்த்துவது எடப்பாடி பழனிச்சாமியின் ஆத்திரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 
இதையும் படிங்க: இபிஎஸ்- ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம்… இந்த ஒற்றுமை தொடரும்... TTV தினகரன் சூளுரை..!