தமிழக மாணவர்களுக்கான கல்வி நிதியை, மத்திய அரசு விடுவிக்காததை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆகஸ்ட் 30ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் ஈடுபட்டுள்ளார். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி. அலுவலகம் அருகில், தொடர்ந்து 3 நாட்களாக உண்ணாவிரத்தில் ஈடுபட்ட அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், டெல்லி தலைமை, மாநிலத் தலைமை என யாரிடமும் தகவல் தெரிவிக்காமல், சசிகாந்த் தன்னிச்சையாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழக எம்.பி.க்கள் புகைச்சலைக் கிளப்பியுள்ளனர். வரும் 7ம் தேதி ஓட்டு திருட்டு தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நடக்க உள்ளது. இதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளாரா என தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் கட்சி தலைமையிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: முடியவே முடியாது! சசிகாந்த் செந்தில் விடாப்பிடி…மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்
தேர்தல் ஆணையம், பாஜகவுடன் இணைந்து ஓட்டு திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காதி தீவிர குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணத்திலும் ஈடுபட்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணம் வர உள்ள தேர்தல்களில் பாஜகவிற்கு எதிரான முக்கிய ஆயுதமாக இருக்கும் என்றும், மக்களிடையே காங்கிரஸின் ஆதரவை அதிகப்படுத்தும் என்றும் தலைமை கருதி வருகிறது. குறிப்பாக வர உள்ள 2026 தேர்தலுக்கான பிரச்சாரமாக தமிழக காங்கிரஸ் கமிட்டி இந்த விவகாரத்தை கையில் எடுக்க காத்திருந்தது.
ராகுல் காந்தியின் சுற்றுப்பயணம் மற்றும் பாஜகவின் ஓட்டு திருட்டு குறித்து தேர்தல் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கு இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் ரீச் ஆக வேண்டியது அவசியம். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஓட்டு திருட்டு தொடர்பான விழிப்புணர்வை மடைமாற்றும் செயலாக சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளதாக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையே ஓபான பேசியுளார். ஓட்டு திருட்டு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலையில், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சசிகாந்த் செந்தில் கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் செல்வப்பெருந்தகையின் பேச்சை காதில் கூட வாங்காமல், எனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அறிவித்துள்ள சசிகாந்த் செந்தில், மருத்துவமனையிலேயே தொடர்ந்து உண்ணாவிரத்திலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “என் ஃபுல் சப்போட் உங்களுக்கு தான் இறங்கி அடிங்க” - எம்.பி சசிகாந்த் செந்திலுக்கு போன் போட்ட ராகுல் காந்தி...!