தவெக வேட்பாளர் சத்தியபாமா மூலனூரில் கிராமம் கிராமமாகச் சென்று, முதலமைச்சர் விஜயின் மெழுகுச் சிலையை வைத்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், சில பகுதிகளில் அவருக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா, மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வஞ்சிப்பாளையம், மேற்குவளசு, சோமன்கோட்டை, முத்துகவுண்டன்வலசு மற்றும் ஜே.ஜே. நகர் உள்ளிட்ட 43-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் சென்ற அவர், விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
இதையும் படிங்க: தாராபுரத்தில் மண்ணைக் கவ்வும் தவெக... விவசாயிகள் கூட்டாக சேர்ந்து செய்த காரியம்... சி.எம்.விஜய்க்கு செம்ம ஷாக்...!
இந்தப் பிரச்சாரத்தின்போது வாகனத்தில் தவெக தலைவர் விஜயின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டு, நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது.
அதேநேரத்தில், சத்தியபாமா வாக்கு சேகரிக்கச் சென்ற சில கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தொகுதி மக்களின் உள்ளூர் பிரச்சினைகள், வேட்பாளர் தொடர்பாக நிலவும் அதிருப்தி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் தொடர்பாக சிலர் கேள்விகளை எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வாக்கு சேகரிப்பின்போது வேட்பாளருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், சில இடங்களில் எதிர்ப்பு குரல்கள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, கூட்டத்தில் பேசிய தவெக வேட்பாளர் சத்தியபாமா, தன்னைப் பற்றி பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தமிழகத்தில் சிறந்த ஆட்சியை வழங்கி வரும் முதலமைச்சர் விஜய்க்கு வலுசேர்க்கும் வகையில் தன்னை விசில் சின்னத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு, விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.
இதனால், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் பிரச்சாரம் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் சில கிராமங்களில் அவருக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பும் தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு - சத்தியசோதனை தாங்காமல் சத்யபாமா எடுத்த அதிரடி முடிவு...!