திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியது.
ஆர்.எஸ்.எஸ்-ன் VIGIL அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ‘பாரதி கண்ட வந்தே மாதரம்’ தலைப்பில் பேசிய சீமான், “எந்த பிராமண எதிர்ப்பை காட்டி திராவிட இருப்பை கட்டினியோ, அதே பிராமண கடப்பாரையை கொண்டு பாழடைந்த திராவிட சுவற்றை இடிப்பேன்” எனக்கூறியதை நாம் தமிழர் கட்சியினரே ரசிக்கவில்லை.
நாம் தமிழர் அமைப்பை ஆரம்பித்தது முதல் சில ஆண்டுகள் வரை கருப்பு சட்டை சகிதமாக மேடையில் தோன்றிய நபர் தான் சீமான். தன்னை பெரியாரின் பேரனாக அறிவித்துக் கொண்டு பேச தொடங்கியவர், பிற்காலத்தில் பெரியாரை தூற்றிய கதையை அனைவரும் அறிவார்கள். தற்போது திராவிட அரசியலை முற்றிலும் மறந்துவிட்டு சீமான் பாஜகவின் பி டீம் என கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதையும் படிங்க: தேவையில்லாம பேசாதீங்க… RSS- ஐ பூந்து விளாசிய ராகுல் காந்தி… கொந்தளித்த பாஜக..!
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன் என்பது தொடர்பாக சீமான் விளக்கமளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாரதி குறித்து திமுக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தாலும் அதில் நான் கலந்து கொண்டு பேசுவேன். எங்கு பேசினேன் என பார்க்க கூடாது, என்ன பேசினேன் என தான் பார்க்க வேண்டும். மக்களின் தேவைகளுக்காக எந்த போராட்டங்களையும் செய்யாதவர்கள் தான் திருப்பரங்குன்றத்தில் தர்கா அருகே தீபம் ஏற்ற போராடுகிறார்கள் எனக்கூறியுள்ளார்.
ஆனால் சோசியல் மீடியாக்களிலோ, பாஜக – ஆர்.எஸ்.எஸ் கொள்கையும் சீமானின் கொள்கையும் வேறல்ல. பாஜக இந்தியாவில் இந்துக்கள் தான் இருக்க வேண்டும் என்று மதவெறி அரசியலை செய்கிறது என்றால், சீமான் தமிழ்நாட்டில் தமிழர்கள் தான் இருக்க வேண்டும் மற்றவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்று இனவெறி அரசியலில் செய்கிறார். அதனால் சீமான் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்து கொண்டது குறித்து ஆச்சரியப்பட தேவை இல்லை என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: S.I R. சட்டவிரோதம்... மக்களவையில் ராகுல் காந்தி ஃபயர் ஸ்பீச்...!