2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியது. சீமான் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நாம் தமிழர் கட்சி காரைக்குடி தொகுதியில் வேட்பாளராக சீமான் களமிறங்கி இருக்கிறார். காரைக்குடி தொகுதியில் சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க: நடைப்பயிற்சி மேற்கொண்டு காரைக்குடியில் சீமான் வாக்கு சேகரிப்பு..! கார்த்தி சிதம்பரம் எம்.பி.யை தவிர்த்த சீமான்..!
இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்வு நிலையில் வாக்கு சேகரிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனிடையே, காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் காரைக்குடி வேட்பாளருமான சீமான் ரோடு ஷோ நடத்தினார். தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடை சூழ சீமான் ரோடு ஷோ நடத்தினார். செல்லும் வழியெங்கும் சீமானுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: எந்தக் கொம்பன் வந்தாலும் என் வெற்றியை தடுக்க முடியாது..! சீமான் திட்ட வட்டம்..!