கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலருக்கு நீதிமன்ற காவலும் வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க இதுவரை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கரூர் விவகாரத்தில் கைது செய்யாமல் விஜயையும், ஆதவ் அர்ஜுனாவையும் வைத்துள்ளது கூட்டணிக்காக தான் என்று தெரிவித்தார். விஜய், ஆதவ் அர்ஜுனாவை கைது செய்யாமல் இருப்பதற்கு காரணம் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக தான் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் பற்றி பேசிய சீமான்... என்ட்ரி கொடுத்த போலீஸ்! பிரஸ்மீட்டில் பரபரப்பு...!
கூட்டணிக்கு வராவிட்டால் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை எப்போது தொடங்கும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார். மேலும், சிபிஐ விசாரணை செய்ய வேண்டிய நபர்கள் அனைவரையும் விஜய் சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டார் என்றும் கூறினார். காரணமானவரையே விசாரிக்கவில்லை என்றால் விசாரணை எப்படி இருக்கும் என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் விஜயை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை நடத்துகிறார்கள்.கடைசியாக கரூர் வழக்கின் விசாரணையை பார்ப்பீர்கள் என தெரிவித்தார்.
நடிகர்களை நேசிப்பவர்கள் ஏன் ஆளில்லை. நாட்டை நேசிப்பவர்கள் என்னுடைய ஆட்கள் என்றும் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வாக்குரிமை கொடுக்க மாட்டோம்.அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் மொத்தத்தையும் பாஜக காரர்கள் இழுத்து விடுவார்கள்.அவர்கள் அனைவரும் மொழியால் ஒன்றிணைந்து விடுவார்கள் என்றார். பிறகு நம்மையே விரட்ட ஆரம்பித்து விடுவார்கள்.தமிழகத்தில் 150 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை அறிவித்திருக்கிறேன்.திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி பெரிய மாநாடு நடத்த இருக்கிறோம். அதில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவிப்பேன் என சீமான் கூறினார். யாருடைய கூட்டணி என்று கேட்டவுடன் சிரித்தபடி ட்ரம்புடன் என்று கூறினார். மக்கள் மனநிலையில் மாற்றம் வந்தால் எந்த கொம்பாதி கொம்பணையும் வீழ்த்துவார்கள் என பேசிய சீமான், எத்தனை அணிகள் பிரிந்து இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்காது. கச்சத்தீவை மீட்க முடியாமல் கையாலாகாத அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: கல்வியில் சிறந்த தமிழ்நாடா? எதுக்கு இந்த வீண் பெருமை... சீமான் காட்டம்..!