ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட ஆய்வக கட்டடங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே முதல்முறையாக 5 ஆண்டு கால திட்டம் என்ற பெயரில் முதல் அமைச்சரவை கூட்டத்தில் திட்டங்களை துறை வாரியாக வகுத்துள்ளார். ஒவ்வொரு துறைவாரியாக ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார் முதலமைச்சர் விஜயின் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார் என்றார்.
எல்.நினோ பாதிப்பு பேரிடர் மேலாண்மை துறையின் நடவடிக்கை என்ன.? என்ற கேள்விக்கு, எல் நினோ பாதிப்புகளை ஆய்வு செய்ய சிறந்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது அந்த குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்து துறைக்கு அறிக்கை வழங்கும். முதல் முறையாக தமிழ்நாட்டில் மட்டும்தான் இது போன்று குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரெஸ்டோ பார் திறக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு, எங்களுடைய நோக்கம் பூரண மதுவிலக்கு. இரண்டாவது எங்கெங்கே பிரச்சனை இருக்கிறது என மக்கள் சொல்கிறார்களோ கோவில்கள் பள்ளிகள் பேருந்து நிலையங்கள் பகுதிகளில் இருந்த மது கடைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன இது ஒரு வரலாறு. மக்கள் போராட்டமே இல்லாமல் முதல் முறையாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படுவது குறித்து துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்.
இதையும் படிங்க: "துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்"... விராலிமலை இடைத்தேர்தலை குறிவைத்த எடப்பாடி பழனிசாமி!
குதிரை பேரம் குறித்து அதிமுக நேற்று DGP யிடம் புகார் அளித்திருப்பது குறித்து.? எழுப்பப்பட்ட கேள்விக்கு, குதிரை பேரம் என்றெல்லாம் சொல்ல கூடாது. எடப்பாடி பழனிச்சாமி செய்யாத காரியம் ஒன்றுமில்லை. அவர் நெஞ்சிலே கை வைத்து சொல்ல வேண்டும். 47 பேரை வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஆகலாம் என பாண்டிச்சேரியில் பேசினாரா இல்லையா.. முஸ்லிம் லீக் தலைவர் தெளிவாக சொல்லியிருக்கிறார் அதற்கு இதுவரை எடப்பாடி பதில் தரவில்லை. இன்று எடப்பாடி பொய் என கூறுகிறார். அதிமுகவிலிருந்து வெளியே வந்தவர்கள் அனைத்தும் அதற்கான காரணத்தை கூறி விட்டார்கள். தெற்கும் வடக்கும் இணையப் போவதில்லை. அதனை தெளிவுபடுத்தி விட்டுத்தான் வெளியே வந்தார்கள்.
நடந்தாய் வாழி காவிரி திட்டம் செயல்படுத்த எடப்பாடி பழனிச்சாமி கேட்கிறாரே?
அதற்கான பணிகள் கதர் துறை அமைச்சர் டெல்லி சென்று கேட்டுள்ளார். பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.. கடந்த வாரம் இரண்டு நாட்கள் டெல்லி சென்று அந்தப் பணிகளை சிறப்பான முறையில் செய்துள்ளார்..
தொகுதி மறு சீரமைப்பு குறித்து தவெக நிலைப்பாடு என்ன?, இன்னும் அது குறித்த கடிதம் வரவில்லை வந்ததற்கு பிறகு முடிவு செய்வார். முதலமைச்சர் அதற்கான முடிவுகளை மேற்கொள்வார் என்றார்.
கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் போராடுகின்றனரே.? தண்ணீர் திறக்கப்படுமா.? என்ற கேள்விக்கு, பவானி சாகர் அணைக்கு மிக குறைவான அளவில் தண்ணீர் வருகிறது. ஆறரை டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது 5 டிஎம்சி குடிநீருக்கு தேவை. மழை சூழ்நிலை ஏற்ப அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். விவசாயிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனக்கூறினார்.
2006.ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது முதல் தவறு என வைகோ கூறி இருக்கிறார்? என்ற கேள்விக்குஅதற்கு மாற்று கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்தகட்ட வியூகம்? புதுக்கோட்டை, கடலூர் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை..