அதிமுக பொதுக்குழுவால் நீக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்குள் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்து உள்ள நிலையில், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை தூக்கியடித்த இபிஎஸ். இன்றிலிருந்து அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சிக் குறிப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். செங்கோட்டையன் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்கள் 7 பேரின் கட்சி பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து கே.எஸ் மோகன் குமார், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நம்பியூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து சுப்ரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து சென்னை மணி, கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து குறிஞ்சி நாதன், அந்தியூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து தேவராஜ், அத்தாணி பேரூராட்சி செயலாளர் பொறுப்பில் இருந்து ரமேஷ், துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து மருதமுத்து ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
இதையும் படிங்க: கொள்ளையடிக்க தெரிஞ்சா தான கரப்ஷன் பண்ண முடியும்! திமுக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 7 பேர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தங்களையும் கட்சிப் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி உள்ளனர்..
மாவட்ட மகளிர் அணி செயலாளரும்,
முன்னாள் எம்பி.யுமான சத்தியபாமா, ஐ.டி பிரிவு செயலாளர் செந்தில்குமார், மாவட்ட எம் ஜி ஆர் அணி இணை செயலாளர் அருள் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் கணேஷ், பேரூராட்சி செயலாளர்கள் 6 பேர் உட்பட அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனித்தனியாக கடிதங்களை எழுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்... இபிஎஸ் அதிரடி அறிவிப்பு