பள்ளி மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது இன்றைய இந்திய சமூகத்தில் மிகுந்த கவலை அளிக்கும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது வெறும் தனிப்பட்ட பழக்கமாக மட்டுமல்லாமல், இளம் தலைமுறையின் உடல், மன, கல்வி மற்றும் சமூக வளர்ச்சியை பாதிக்கும் ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது. தமிழகத்திலும் கஞ்சா பயன்பாடு மாணவர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. பள்ளிக்கு கஞ்சா கொண்டு செல்லும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
சென்னை வியாசர்பாடியில் 11 ஆம் வகுப்பு மாணவன் பள்ளிக்கு கஞ்சாவை எடுத்து சென்றுள்ளதாக தெரிகிறது. அரசு பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவர் இடுப்பில் வைத்து கஞ்சா கொண்டு சென்றுள்ளார்.பள்ளிக்கு கஞ்சா கொண்டு வந்ததை தலைமை ஆசிரியர் கண்டுபிடித்து உள்ளார். உடனடியாக மாணவனை பிடித்து காவல்துறையிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்படைத்து உள்ளார்.

மாணவன் தனது பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்து கொண்டுவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். கல்விக் கூடங்களை மதுக்கூடங்களாகவும், கஞ்சா நிலையங்களாகவும் மாற்றி மாணவச் சமுதாயத்தை சீரழித்து வைத்திருப்பது விடியா திமுக ஆட்சியின் வெட்கக் கேடு என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விட்ருங்க… விட்ருங்க..! கதறிய நிருபர்… இரக்கமின்றி தாக்கிய MLA குரூப்..! அதிமுக கண்டனம்..!
கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மது அருந்திய சம்பவங்கள், கஞ்சா போதையில் அப்பாவிகள் மீது தொடரும் தாக்குதல்கள் என தமிழகமே கஞ்சா போதை பொருள் பிடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்றும் கஞ்சா தடுப்பு ஆப்ரேஷன்கள், கள்ளச்சாரயம் ஒழிப்பு இவையெல்லாம் வெறும் பெயரளவுக்கு மட்டும் தானா எனவும் கேட்டார். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலாக்கத்துறை, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு செயல்படுகிறதா இல்லையா என்று கேட்கும் அளவிற்கு கஞ்சா போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்றும் மாணவர்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டிய அரசு இன்று அவர்களை போதையின் பாதையில் மாற்றி சமூகக் குற்றாவளிகளாக மாற்றி வைத்திருப்பது விடியா திமுக ஆட்சி அவலத்தின் உச்சம் என்றும் சாடினார்.
இதையும் படிங்க: வேலூரில் போராட்டம் அறிவித்த அதிமுக..! முந்தி கொண்ட எம்எல்ஏ..! ஹாஸ்பிடல் திறப்பு தேதி அறிவிப்பு..!