நேற்று நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.
தமிழக காவல்துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் குற்றச்சாட்டு இன்றி சிறப்பாகப் பணியாற்றிய போலீசாருக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் முதல்வர் பதக்கம் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டும் அந்தந்த மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால், பதக்கங்கள் தயாரிப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பெரிய அவலம் நடந்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் 113 போலீசாருக்கு பதக்கம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் புதிய பதக்கங்கள் சரியான நேரத்தில் தயாராகவில்லை. இதனால் கடந்த ஆண்டு பதக்கம் பெற்ற போலீசாரின் வீடுகளுக்கு சென்று, அவர்கள் வாங்கிய பழைய பதக்கங்களை இரவலாக வாங்கி வந்தனர். அந்த பழைய பதக்கங்களைத் தான் இந்த ஆண்டு விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போலீசாருக்கு அணிவித்தனர்.
இதையும் படிங்க: டெல்லி வரை திமிறிய ஜல்லிக்கட்டு காளை! தமிழ்நாடு அலங்கார ஊர்தியின் சிறம்பங்கள்!! மாஸ் மொமண்ட்!
பதக்கத்தையே இரவல் வாங்கும் இரவல் மாடல் பொம்மை முதல்வர் - தமிழகத்தின் சாபக்கேடு!
இன்று தமிழக காவலர்களின் கௌரவம் நடுத்தெருவில் நிற்கிறது!
இந்த வருட குடியரசு தின விழாவில் பதக்கம் கொடுக்கக் கூடத் துப்பில்லாமல், போன வருடம் கொடுக்கப்பட்ட பதக்கங்களை இரவல் வாங்கி இந்த வருடம்… pic.twitter.com/D4RlFPrZF3
— AIADMK - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) January 26, 2026
அதுவும் போதாது என்று, போதிய பதக்கங்கள் இல்லாததால் முதல் வரிசையில் அணிவிக்கப்பட்ட பதக்கங்களை கழற்றி, அடுத்த வரிசையில் நின்றவர்களுக்கு மீண்டும் அணிவிக்கும் காட்சி நடந்தது. இரவல் பதக்கம் வாங்கி, அதையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தியது போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் இதே போன்ற குழப்பங்கள் நிலவியதாகவும், பல போலீசார் ஆதங்கம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
அதிமுக வெளியிட்ட அறிக்கையில், “காவலர்களின் கவுரவம் நடுத்தெருவில் நிற்கிறது. விளம்பரங்களில் கவனம் செலுத்தும் திமுக அரசுக்கு, போலீசாருக்கு பதக்கம் வாங்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தெரியாதா? பதக்கங்களை கூட இரவல் வாங்கும் இரவல் மாடல் முதல்வர் தமிழகத்தின் சாபக்கேடு. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நேரத்தில் துப்பாக்கியை இரவல் வாங்க முடியுமா? கடைசி இரண்டு மாதங்களிலாவது அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
போலீசார் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் போது, அவர்களுக்கு வழங்கப்படும் கௌரவத்தை கூட சரியாக நிர்வகிக்க முடியாத அரசின் நிலை இது என்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: விண்வெளி நாயகனுக்கு வீரதீர விருது!! சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கி கவுரவித்த ஜனாதிபதி!