விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் பசுமைக் தாயக நிறுவனரும்,தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான செளமியா அன்புமணி இன்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அப்போது செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் மற்றும் பாமக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற சிக்கப்பெண் நடைப்பயணம் வெற்றி பெற்ற நிலையில் நன்றி தெரிவிப்பதற்கு ஆஞ்சநேயர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு கள் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள பாமக பூரண மதுவிலக்கு பேரணி தொடர்பாக நேற்று சென்னையில் அளித்த பேட்டியில் பாமக பூரண மதுவிலக்கு பேரணியில் கள் நிலைப்பாடு என்ன என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த செளமியா அன்புமணி, பாமக பூரண மதுவிலக்கு கொள்கையில் கள் தொடர்பாக என்ன இடம் பெற்று உள்ளதோ அதே நிலைப்பாடுதான் என்றார்.
இதையும் படிங்க: பெண்களிடம் பலத்த வரவேற்பு இருக்கு! தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை பாராட்டிய சௌமியா அன்புமணி!
எஸ்.ஐ.ஆர் தொடர்பான கேள்விக்கு SIR பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் உள்ளது அதன்பிறகு தான் விளக்கமாக சொல்லமுடியும் என்றார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் பாமக இடம்பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செளமியா அன்புமணி அது வதந்தி என்றும் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்றார்.
இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் செளமியா அன்புமணி?... வன்னியரசு கொடுத்த ஷாக்கிங் ரிப்ளே...!